உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வுபெற்ற நாளில் டிரைவரின் கைமாறு: மாநகராட்சிக்கு மோட்டார், வேன் அன்பளிப்பு

ஓய்வுபெற்ற நாளில் டிரைவரின் கைமாறு: மாநகராட்சிக்கு மோட்டார், வேன் அன்பளிப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி டிரைவர் மனோகரன் தான் ஓய்வுபெற்ற நாளில் நன்கொடையாக மினி வேன், நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சும் பைப் ஆகியவற்றை மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.மதுரை அண்ணாநகர் சதாசிவம்நகரை சேர்ந்தவர் மனோகரன் 60. மாநகராட்சியில் 1992ல் வாகன டிரைவராக பணியில் சேர்ந்தார். 32 ஆண்டுகள் பணியாற்றி நேற்றுமுன்தினம் (ஜூன் 30) ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற கையோடு அடுத்த நாள் மாநகராட்சிக்கு குடும்பத்துடன் வந்து, ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.அதாவது தன்னை 32 ஆண்டுகளாக வாழவைத்த மாநகராட்சிக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில மக்கள் பணிக்காக மாநகராட்சிக்கு உபயோகப்படும் நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சும் பைப், மினி வேன் ஆகியவற்றை நன்கொடையாக மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார். வேனின் உரிமை, ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் மாநகராட்சி பெயருக்கு மாற்றி வழங்கினார்.மனோகரன் கூறியதாவது: உதவி பொறியாளர், உதவி கமிஷனர், நகர் பொறியாளர் என பல அதிகாரிகளுக்கு டிரைவராக பணியாற்றினேன். அதிகாரிகள் ஆய்வுப் பணிக்கு செல்லும் போதெல்லாம் மாகராட்சி வார்டுகளில் சாக்கடை அடைப்பு பிரச்னை அவர்களுக்கு சவாலாக இருந்தது.பல ஆண்டுகளாக நான் நேரடியாக அறிந்தேன். பணி ஓய்வுக்கு பின் என் சிறிய பங்களிப்பாக மாநகராட்சிக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். அப்போது மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அடைப்புகளை சரி செய்ய பயன்படும் நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சு பைப் உடன் மினி வேனை நன்கொடையாக வழங்கினேன். இவற்றின் மதிப்பு ரூ.1.30 லட்சம். 58 வயதில் ஓய்வு பெற இருந்த நேரத்தில் கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கிடைத்தது. பணிக்காலத்தில் என் குடும்பத்தை வாழவைத்த மாநகராட்சிக்கு கைமாறு செய்யும் வகையில் இதை அளித்தேன். மனநிம்மதி ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

THINAKAREN KARAMANI
ஜூலை 02, 2024 16:55

ஓய்வு பெற்ற பிறகும்கூட பலர் தான் வேலைபார்த்த நிர்வாகத்தைப்பற்றி குறைகள் பலவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இத போன்று தான் வேலைபார்த்த நிர்வாகத்திற்கு இந்தப்பருவக்காலத்திற்கு தேவையானவற்றை கைமாறாகச் செய்த இந்த ஓட்டுநர் ஐயா அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.


Tiruchanur
ஜூலை 02, 2024 15:48

பெரிய விஷயம். வாழ்த்துகள்


Manikumaar
ஜூலை 02, 2024 15:02

பெரிய உதவி. அவரது அசாதாரண செயலுக்காக நான் தலை வணங்குகிறேன். கடவுள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.


Sridhar
ஜூலை 02, 2024 12:09

ஐயா உங்கள் மாதிரி இந்த உலகத்தில் பார்ப்பது மிக அரிது நீங்கள் உங்கள் குடும்பம் நூறு வயது மிக நன்றாக செழிப்பாக வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்


பெரிய ராசு
ஜூலை 02, 2024 11:18

வாழ்த்துக்கள் அன்னே உங்கள் சேவை ஊழல் பெருச்சாளி அரசியல் வியாதிகளுக்கு ஒரு செருப்படி


Jysenn
ஜூலை 02, 2024 11:09

A private man should help his family first not the public as there is an elected government to do this.


Senthoora
ஜூலை 02, 2024 11:42

ஐயா, தானம் தலைமுறையை காப்பாற்றும்.


Jana T
ஜூலை 02, 2024 07:34

அதிகாரிகளுக்கு இந்த அக்கறை இருக்காது தொழிலாளியின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள


Senthoora
ஜூலை 02, 2024 07:57

இதுக்கு சிலர் சொல்லுவாங்க, இவரு வாங்கிய சம்திங் இல் இருந்து இதை வாங்கியிருப்பார் என்று, செய்யவும் விடமாட்டர்கள். செய்தாலும் குறை சொல்வார்கள். நம்ம வாசகர்கள் டிசைன் அப்படி.


Dhandapani
ஜூலை 02, 2024 07:11

வாழ்த்துக்கள் டிரைவர் சார் குடும்பம், இவர் தனது பணியை எவ்வளவு நேசித்திருந்தால் மக்கள் பயன்பாட்டுக்கு தூய்மை வாகனம் பரிசளித்திருப்பார், இவரை போன்றோர் இருப்பதால் தான் மழை பெய்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை