உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கு; விசாரணை குழுவில் இருந்து டி.எஸ்.பி., விலகல்

அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கு; விசாரணை குழுவில் இருந்து டி.எஸ்.பி., விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி விலகினார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் செய்தனர். இந்த வழக்கில், பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zn7n558n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் கொண்டதாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாநில சைபர் கிரைம் டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி இடம் பெற்றிருந்தார். இந்தக் குழுவினர் எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி, திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னை சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், டிஎஸ்.பி., பணியை ராஜினாமா செய்வதாகவும் டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார். டி.எஸ்.பி.,யின் இந்த முடிவு போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MARUTHU PANDIAR
ஜன 31, 2025 22:40

ஞான சேகரனாரு ஒரு வெயிட்டான முக்கியஸ்தரு என்பதால் என்கவுண்டர் எல்லாம் சுத்த வதந்தி தானம். அதற்கு நோ சான்சாம்+++எனவே வழக்கின் விசாரணையின் போக்கில் இதைப் போலவே இன்னும் பல தீவிர முட்டுக் கட்டைகள் போடப் படலாமாம் +++ பைனலாக புகார் தரப்பிரே புகாரை வாபஸ் பெற "அன்புடன்" அறிவுறுத்தப் படலாம் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.


MARUTHU PANDIAR
ஜன 31, 2025 22:29

என்ன பேசிக்கறாங்க தெரியுமா மக்கள் ? அந்த சார்" யாரென்று கிட்டத்தட்ட புரிந்து விட்ட நிலையில் அவரைக் காப்பாற்ற எந்த லெவலுக்கு செல்லத் தயாராகி விட்டார்களாம். தேர்தலுக்கு சுமார் ஒரு ஆண்டே இருப்பதால், விசாரணையில் உண்மை வெளி வந்து விடும் வாய்ப்பு அதிகம் என்று கருதப் படுவதால் அது பெரிய சிக்கலாகி விடுமாம் பேசிக்கறாங்க.


Rajasekar Jayaraman
ஜன 31, 2025 11:16

ஐயோ பாவம் கட்டு அண்ணாமலையிடம் போனது தெரியாமல் எலி வலையில் மாட்டிகொண்டது.


Iniyan
ஜன 31, 2025 10:09

அந்த சாரின் அழுத்தம் காரணமா?


Ramesh Sargam
ஜன 30, 2025 19:44

விசாரணை குழுவில் இருந்து இப்படி திடுதிப்பென்று ஒரு அதிகாரி ஒரு சில காரணங்களால் விலகினால்... அந்த விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும். தன்னை சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால்... அவர்களுக்கு என்ன பிரச்சினையோ? ஆட்சியில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை கொடுத்திருக்கலாம். உச்சநீதி மன்ற நீதிபதிகள் விசாரித்தால் கூட, இந்த திமுகவினர் அவர்களுக்கும் அழுத்தம் கொடுப்பார்கள், மிரட்டுவார்கள்.


Prasad VV
ஜன 30, 2025 19:34

"சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், டிஎஸ்.பி., பணியை ராஜினாமா செய்வதாகவும் டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார்".... பெண் IPS அதிகாரிகளே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்.


Karthik
ஜன 30, 2025 19:21

இந்த கொடுங்கோல் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் தாமாக வீட்டிற்கு சென்றால் குடும்பம் / வாழ்க்கை உண்டு. இல்லையேல் காட்டுக்கு அனுப்பப்படுவர். வேறு வழி??


sankaranarayanan
ஜன 30, 2025 18:41

ஒன்றுமே இல்லை திராவிட மாடல் அரசினிடமிருந்து மேலதிகாரிகளிடம் மிரட்டல்கள் வந்திருக்கும் அதற்கு பயந்து ஓடிவிட்டார் நல்லவர் அதற்குமேல் வாயை திறந்து சொல்லமாட்டார் பிறகு பதவிக்கே ஆபத்து உண்டாகும் ஆண்டவா இந்த வழக்கு எப்போ முடியும் ?அப்படி முடியும் இன்னும் யார் யார் அந்த சார் என்றெல்லல்லமே புதிறாக இருக்கின்றன


RK
ஜன 30, 2025 18:10

உண்மையான அதிகாரி திமுக அராஜக ஆட்சியில் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. அதனால் விலகி விட்டார்.


Kasimani Baskaran
ஜன 30, 2025 17:39

மூன்று பெண் அதிகாரிகள்தானே விசாரித்தார்கள். அவர்களை எப்படி மாற்றினார்கள்? இந்த ஆள் மாடலின் ஆள் போல தெரிகிறது.


திகழ்ஓவியன்
ஜன 30, 2025 21:12

தமிழ்நாட்டின் வளர்ச்சியை வெறுக்கும் பாரதீயன்களின் திடடமிடட சதியை முறியடிக்கும் ஆற்றல் தமிழருக்கு உண்டு.அரசு நிவாகத்தில் ஊடுருவியுள்ள Rss நபர்களை கண்காணிக்கவேண்டும்.கடவுள்கள் அனைத்தும் சைவமாகவே காடடப்படுவதன் தன்மையை கண்டறிந்தால் பிரச்சினையே இருக்காது.


முக்கிய வீடியோ