உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

புதுடில்லி: அரசியல் பழிவாங்கும் நோக்கில், இருப்பதாக கூறி, ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியது.டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் ஜூன் 1ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலைவரை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சிறையில் அடைத்துள்ளதாக கூறி ஆம் ஆத்மியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இரண்டு நிமிடங்கள் உடைய பிரசார பாடலை ஆம் ஆத்மி சமீபத்தில் வெளியிட்டது. 'இது தேர்தல் நடத்தை விதிமீறல்' எனக்கூறி, அக்கட்சியின் பிரசார பாடலுக்கு தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது. தற்போது கட்சி தலைமை பிரசார பாடலில் சில திருத்தங்களை செய்துள்ளது. இந்நிலையில் இன்று(மே 04) தேர்தல் பிரசார பாடலுக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian
மே 04, 2024 10:57

எப்போது தேர்தல் முடியும் என்றாகிவிட்டது! இனி ஒரு நாடு ஒரு நாள் ஒரு தேர்தல் தான்! - அதுவும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செய்யும் வசதி ( அதை குறை கூறி கோர்ட்டுக்கு யாரும் செல்லாத படி) ஓட்டளித ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் ரூபேயில் வரவு வைக்கப்படும் (கையில் மை வைக்கும் வண்ணம்) என்று ஒரு ஏற்பாடு செய்து ஓட்டளித்த உடன் அந்த அந்த கட்சி அலுவலகத்தில் வைக்க பட்ட EVM இல் ஓட்டு பதிவாகும் மொத்த ஓட்டு தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பதிவாகும் வண்ணம் செயல் முறை படுத்த வேண்டும்! அடுத்த நாளே தேர்தல் முடிவுகள் அறிவுப்பு. தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு கட்சிகள் தங்கள் அலுவலகத்தில் உள்ள பெட்டகத்தை திறத்து சரி பார்த்துக் கொள்ளலாம்! மகிழலாம் கொண்டாடலாம் இல்லை ஒப்பாரி வைக்கலாம்! இது தான் நாளைய இந்தியாவின் உலகே திரும்பி பார்க்கும் தேர்தல் முறையாக இருக்க வேண்டும்!


V Natarajan
மே 04, 2024 10:24

00


Kasimani Baskaran
மே 04, 2024 10:00

ஆம் ஆத்மி இல்லை - கொள்ளைக்காரக்கூட்டம் காங்கிரசின் புதிய எடிசன் திமுக எப்படி இருக்குமோ அது போலத்தான் இவர்கள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ