உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம், 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கடந்த 2022 செப்., 10ல் மின் கட்டணம், 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கவில்லை.இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை 1முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் விகிதம் விபரம்

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.400 யூனிட் வரை ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்வு401 -500 யூனிட் வரை ரூ. 6-15 லிருந்து ரூ.6.45 ஆக உயர்வு501-600 யூனிட் வரை ரூ.8.15- ரூ.8.55 ஆக உயர்வு601-800 யூனிட்வரை 9.20-9.65 ஆக உயர்வு801-1000 யூனிட் வரை 10.20 -10.70 ஆக உயர்வு1000 யூனிட்டிற்கு மேல் ரூ.11.25 - ரூ.11.80 ஆக உயர்வுவணிக பயன்பாடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 வசூலிக்கப்படும். 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Swaminathan L
ஜூலை 16, 2024 09:48

பல்வேறு ஸ்லாட்களில் இருபத்தைந்து முதல் அறுபத்தைந்து பைசா வரை ஒரு யூனிட்டுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது. இது தவிர்க்க இயலாத அதிகரிப்பு. மின்வாரியம் சீராகச் செயல்பட, பெரு நஷ்டத்திலிருந்து மீள, தமிழக அரசு அனைத்து இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவசம் என்பதை நிறுத்த வேண்டும். வருமானம் மிகக் குறைவாக உள்ளவர்கள் மட்டுமே பெற வேண்டிய இந்தச் சலுகை பெரும் செல்வந்தர்களுக்கும் கிடைப்பது மோசமான நிர்வாகச் செயல்பாடு. இது தொடர்ந்தால் மின்வாரியம் மீளவே முடியாத நஷ்டத்தில் சிக்கிச் சீரழிந்து விடும் முழுமையாக.


karunamoorthi Karuna
ஜூலை 16, 2024 08:31

திமுகவின் தேர்தல் வெற்றி கொண்டாடும் வகையில் மின் கட்டணம் உயர்கிறது மின் கட்டணம் உயர்வதால் மற்ற சேவைகள் மளிகை பொருட்கள் காய் கனி அனைத்து பொருட்களும் விலை உயர்வு ஏற்படும் இதை மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்


Durai Kuppusami
ஜூலை 16, 2024 08:12

மிகவும் சந்தோஷம்.தமிழ்நாடு மின்வெட்டு இல்லா மாநிலம் எல்லா மக்களும் நல்ல செய்தி.கடனில்லா மாநிலமாக மாறும்.......


N Sasikumar Yadhav
ஜூலை 16, 2024 03:30

நிதி நெருக்கடி என தெரிந்தும் கொஞ்சங்கூட கூச்சபடாமல் ஊழல் செய்கிறார்கள் அந்த ஊழலை நிறுத்தினால் போதும் என்ன செய்ய ஓட்டுப்போட ஓசியும் இலவசங்களும் கொடுக்கிறான்களே அதனால அனைவரும் அனுபவிக்கத்தான் வேண்டும்


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 02:02

திராவிட மாடல் சாதனை.


RAJA68
ஜூலை 15, 2024 23:38

என்னங்கடா எப்ப பார்த்தாலும் விடியல் விடியல்னு ஒப்பாரி வைக்கிறீங்க. சினிமா பார்ப்பதற்கு கள்ளத்தனமாக ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்குறீங்க. தண்ணி அடிக்க தினமும் 300 ரூபாய் செலவழிக்கிறீங்க. ஐஸ்கிரீம் கடை உட்கார்ந்து கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிடுறீங்க. COFFE SHOP ல் உட்கார்ந்து கொண்டு ஒரு கோப்பை காபிக்கு 200 ரூபாய் கொடுத்து ஒரு மணி நேரம் டைம் பாஸ் பண்றீங்க... ஆனால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அதிக பச்சமாக 100 ரூபாய் வரை மின் கட்டணம் கூடுதலாக கட்ட முடியாதா. அதுவும் ந 400 யூனிட்டுக்கு மேல்தான் கட்டண உயர்வு. அதுவரை இப்போது இருக்கும் கட்டணம் தான். மின் உபயோகத்தை குறைத்துக் சும்மா ஆளாளுக்கு விடியல் விடியல் என்று ஒப்பாரி வைக்காதீங்க.


vk
ஜூலை 16, 2024 07:58

ஜால்ரா


நான் ஒரு முட்டாளுங்க
ஜூலை 15, 2024 23:35

அப்புறம் என்ன. ஒட்டு போட்டாச்சு. காசும் வாங்கியாச்சு. மின் கட்டணம் ஏத்தியாச்சு. போய் புள்ள குட்டிய படிக்க வைங்ககப்பா


RAAJ68
ஜூலை 15, 2024 23:31

பரவாயில்லை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை பில் தொகை கூடுதலாக வரும்.


Maheesh
ஜூலை 15, 2024 22:51

ஊழல்களை குறைத்தாலே மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும். மிக அதிகமாக உள்ள ஊழியர்களின் சம்பளத்தை எதார்த்தமான சம்பளத்திற்கு கொண்டு வந்தாலே மாபெரும் பெரிய லாபத்திற்கு மாறும்.


Venkatesh
ஜூலை 15, 2024 22:38

பணம் வாங்கி ஓட்டு போடும் மானங்கெட்ட கூட்டம் இருக்கும் வரை திராவிட மாடல் அடாவடி தான்.... பணம் வாங்கி ஓட்டு போடும் டேஷ்கள் எந்த எல்லைகக்கும் போவர்கள் போலவே.... அவர்கள் வீட்டு பெண்கள் ஜாக்கிரதை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை