மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
55 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை,கோவில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லுாரிகளில் படிக்கும், 1,894 மாணவ - மாணவியர், கல்லுாரி வளாக நேர்காணல் வாயிலாக, 51 தொழில் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.கோவில்கள் சார்பில், ஒரு பல்வகை தொழில்நுட்ப கல்லுாரி உட்பட, 10 கல்லுாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக, 51 நிறுவனங்கள் வாயிலாக கல்லுாரி வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில், 1,894 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவு பெற்றுள்ளனர்.குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரியில், 641 பேர்; பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லுாரியில், 556 பேர்; பாலிடெக்னிக்கில், 197 பேர்; சென்னை கொளத்துார், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 141 பேர்.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 111 பேர் பணி நியமனம் பெற்றுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
55 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago