உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஐ.டி., படித்த 2,500 பேருக்கு வேலை

ஐ.ஐ.டி., படித்த 2,500 பேருக்கு வேலை

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., யின் ஆன்லைன் படிப்பை முடித்த, 2,500 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில், நான்கு ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் என்ற, ஆன்லைன் படிப்பு துவக்கப்பட்டது. இந்த படிப்பில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் இணைந்து படித்தனர்.அந்த வகையில், 27,000 பேர் சேர்ந்து படித்து வரும் நிலையில், நான்காண்டு படிப்பின் நிறைவில், 2,500 மாணவ -- மாணவியர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, https://study.iitm.ac.in/ds/ என்ற இணையதளத்தில், மே, 26 வரை பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை