மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
1 hour(s) ago
சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும், 30ம் தேதிக்குள், 'ஆன்லைன்' வழியில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 2.09 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 1.94 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றி உள்ளனர். அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை, ஆன்லைன் வழியில், வரும் 30ம் தேதிக்குள் சரிபார்க்கப்படும்.சான்றிதழ் விடுபட்டு, அதற்காக அழைக்கப்படும் பெற்றோர் மட்டும், கவுன்சிலிங் உதவி மையத்துக்கு வந்தால் போதும்; மற்றவர்கள் வர வேண்டாம் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துஉள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago | 13
1 hour(s) ago