| ADDED : ஜூன் 06, 2024 02:03 AM
சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு இன்று நிறைவு பெறுகிறது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 420க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., போன்ற இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, தமிழக உயர்கல்வித் துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில், மே 6ல் துவங்கியது. இதுவரை, 2.43 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.இன்றுடன் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெறுகிறது. மாணவர்கள் தங்களின் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை, வரும், 12ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.