| ADDED : ஜூலை 02, 2024 12:29 AM
சென்னை : தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில், நாளை முதல், 17ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளதுராமநாதபுரம் - செகந்திரா பாத் இடையே வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா - மதுரை இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில் செப்., 30 வரை நீட்டித்து இயக்கப்படும் மதுரை - காச்சிகுடா இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் அக்., 2ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் - ஈரோடு இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செப்., 27ம் தேதி வரை இயக்கப்படும்ஈரோடு - நாந்தேட் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் செப்., 29 வரை இயக்கப்படும்காச்சிகுடா - நாகர்கோவில் இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் செப்., 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்நாகர்கோவில் - காச்சிகுடா இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் செப்., 29ம் தேதி வரை இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.