உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி கல்விச்சான்று: ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன் நிறுத்தம்

போலி கல்விச்சான்று: ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன் நிறுத்தம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதில் சிலரது பள்ளி கல்விச்சான்று போலி எனத்தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து மற்ற ஊழியர்களின் கல்விச்சான்றுகளின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டது.இதில் 26 பேர் போலி கல்விச்சான்றுகளை கொடுத்தது உறுதியானது. அவர்களிடம் அறங்காவலர் குழு விளக்கம் கேட்டது.அரசியல் தலையீட்டால் இன்னும் 'விசாரணையிலேயே' இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் ஊழியர்கள் சிலர் பணி ஓய்வு பெற்றனர். இதில் போலி கல்விச்சான்று கொடுத்தவர்களும் அடங்குவர். விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர்களின் பணி ஓய்வூதிய பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V GOPALAN
மார் 05, 2025 09:50

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ரூபாய் 8 லக்ச்ச்ம கொடுத்தால் எந்த தகுதியும் இல்லாமல் உடனடி வேலை.


V GOPALAN
மார் 05, 2025 09:48

There is no surprise. Only in Tamilnadu we can see people with two ration cars two aadhar card. One card with senior citizen facilities. Other one they will surrender to Local Political Mafia. They will use thus aadhar for various benefits from Govt and use for illegal facilities. Before three years my servant maid fromTanjore Adhirampattinam was two aadhar. She said one for local head with different address. Sane in Anna University affiliated colleges for the last 10 years duplicate lecturers are taking salary without Taking class.


M S RAGHUNATHAN
மார் 04, 2025 17:49

ஆரம்ப சூரத்தனம். இதுவரை இம்மாதிரி விவகாரங்களில் அரசோ அல்லது நீதி மன்றமோ ஒரு ஆணியும் பிடுங்கவில்லை. வாய் சவடால் தான்.


R.RAMACHANDRAN
மார் 04, 2025 09:22

அரசு ஊழியர்களில் பலர் போலி கல்வி சான்று போலி சாதி சான்று அளித்து லஞ்சம் கொடுத்து பணியில் சேர்வதால் அவர்களை கண்டு கொள்வது இல்லை.இவர்கள் லஞ்சம் இல்லாமல் எந்த சேவையும் செய்வது இல்லை.வாங்கும் லஞ்சத்தில் மேலதிகாரிகளுக்கு பங்கு கொடுத்து விடுவதால் காப்பாறுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை