உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (செப்.,01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k27o64o8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வழக்கமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இன்று(செப்.,01) மேலும் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (செப்.,01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 முதல் 7 சதவீதம் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ரூபாய் 5 முதல் 150 வரை கூடுதல் கட்டணத்தை செலுத்தி பயணிக்க வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
செப் 01, 2024 13:15

இந்த சுங்க கட்டணங்கள் மத்திய அரசுக்கு செல்லும்வரை அதுவும் வாகனம் வைத்துள்ள வசதியானவர்கள் தான் கொடுக்கிறார்கள் என்பதால், சரிதான். பெட்ரோலுக்கு அதிக வரி விதிப்பதால், இன்று மத்திய அரசின் நிதிநிலைமை சரிசெய்யப்பட்டு, நிறைய கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள எதுவாக இருக்கிறது. அதேபோல் இந்த சுங்க கட்டணங்களும், மாநில அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால், ஏழை எளிய மக்களுக்கு உதவும் பலத்திட்டங்களுக்கு போய் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.


Nandakumar Naidu.
செப் 01, 2024 08:11

கொள்ளையோ கொள்ளை, மயான கொள்ளை, பகல் கொள்ளை அதுவும் அரசின் உதவியுடன். நம் தமிழ் நாட்டில் தேவையானவற்றிர்க்கு போறாடுவதில்லை என்பதே உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை