உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு

முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு

மதுரை ; ''தமிழகத்தின் நீராதார உரிமைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா துணிவாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதை பின்பற்றி முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் ஜெயலலிதா பெற்று கொடுத்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது,'' என, மதுரையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பாண்டியன் குற்றம்சாட்டினார்.தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் அமைப்பு, கூட்டமைப்பு சார்பில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மதுரையில் போராட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசின் விண்ணப்பத்தை ஏற்று ஆய்வுக்குழுவுக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்ட சட்ட நகலை விவசாயிகள் எரித்தனர்.பின் குழுத்தலைவர் பாண்டியன் பேசியதாவது: கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்ப கடிதத்தை ஜனவரியில் கொடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவானது, 152 அடி நீர் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாகவும் அவமதிப்பாகவும் இந்த விண்ணப்ப கடிதமும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியும் உள்ளன.மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி நீரை தேக்கிவைக்க அனுமதி பெற்றதை அடுத்து 142 அடி வரை நீர் நிரப்பி பாசனம் செய்தோம். தற்போது 137 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்ப விடாமல் கேரளா அரசு அணையை தன்வசப்படுத்தி வைத்துள்ளது. கேரள அரசின் 'ரூல் கர்வ்' முறையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசின் கையில் அதிகாரம் இல்லை

அதுபோல கேரள அமைச்சர்களே அணையை திறந்து விடும் அடாவடி செயலிலும் ஈடுபடுகின்றனர். அதை தடுத்து நிறுத்தவோ, சட்ட நடவடிக்கை எடுக்கவோ முதல்வர் ஸ்டாலின் முன்வரவில்லை.அணைக்கு சென்று வருவதற்கான தமிழக படகு நிறுத்தப்பட்ட அதே இடத்தில் இன்று வரை நிற்கிறது. அதை இயக்கவில்லை. மின்சார இணைப்பும் கொடுக்கவில்லை. பேபி அணையை பலப்படுத்துவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கோ சாலை அமைப்பதற்கோ இதுவரை கேரள அரசின் அனுமதியை தமிழக அரசு பெறவில்லை. அணைக்கு சென்று வருவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு தனித்தனி உத்தரவை உச்சநீதிமன்றம் வெளியிட்டும் இன்றுவரை நிறைவேற்றவில்லை.அணையின் நீர் நிர்வாக முறையை தமிழக பொறியாளர்கள் நேரில் சென்று கண்காணிக்க முடியவில்லை. கேரள காவல் துறை கட்டுப்பாட்டுடனும் அச்சுறுத்தலுடனும் தான் சென்று வருகின்றனர். நீர் நிலை அதிகாரமே தமிழக அரசின் கையில் இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது. கேரள அரசு தான் நிர்வாகம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.விவசாயிகளை அவமதித்தால் மிகப்பெரிய எதிரொலியை தமிழக அரசு சந்திக்க நேரிடும். உடனடியாக கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடரவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளாகிய நாங்கள் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ராமன், மணிகண்டன், பிற சங்க நிர்வாகிகள் மதுரை வீரன், உறங்காபுலி, முத்துராமலிங்கம், ஆதிமூலம், அருண், மாணிக்கவாசகம், அழகுசேர்வை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் குழு கூட்டம் ரத்து

புதிய அணை கட்டுவதற்கும், முல்லை பெரியாறு அணையை இடிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம், கேரள அரசு ஜனவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு, இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.இக்குழுவினர், டில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்த உள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்; விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினர்.இந்நிலையில், நேற்று நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அதனால், தமிழக அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கி, தற்காலிக ஆறுதல் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
மே 29, 2024 16:30

தலைப்பே தப்பு - ஜெ - வாங்கி கொடுத்தது, தொலைக்கிறது ஸ்டாலின் அரசு - என்று போட வேண்டும் - அல்லது திமுக அரசு-ன்னு போடணும் - தைரியமா சொல்ல முடியலையா ? . . . ஆனா எல்லாமே ஸ்டாலின் / துரைமுருகன் / பினராயி எல்லாம் சேர்ந்து போடும் அரசியல் ஸ்டன்டுதான்னு - மக்களுக்கு நல்லா தெரியுது - சும்மா சும்மாவாவது- ஒன்றிய அரசுக்கு ஒரு லெட்டர் போட சொல்ல வேண்டியது - அவங்க போட்டவுடன் , இங்கே ரெடியா வச்சிருக்கிற கட்சிக்காரங்க ,விவசாயி வேஷத்துல ஆர்ப்பாட்ட்டம் தூண்டி விட வேண்டியது , பல பிரச்சினைகளை மக்களிடம் மறக்கடிக்க இப்படித்தான் கருணாநிதி காலத்தில் இருந்து நடத்தும் நாடகம் , , ,


Varadarajan Nagarajan
மே 29, 2024 15:15

சில விவசாய சங்கங்களின் குரல்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் கேட்கின்றது. விவசாயிகளுக்கு ஏற்படும் வேறு எந்த பிரச்னையின்போதும் இவர்கள் குரல் கொடுக்காமல் மௌனமாகி விடுகின்றனர். ஏன்?


Anantharaman Srinivasan
மே 29, 2024 13:28

முல்லைப்பெரியாறு அணை இருப்பது தமிழக நிலத்தில். தற்கு பாராமரிப்புக்கு செலவுசெய்வது தமிழக அரசு. ஆனால் அணையின் control power மட்டும் கேராள அரசின் வசம். வெட்கக்கேடு..


UTHAMAN
மே 29, 2024 10:42

தமிழக முதல்வருக்கு எந்நேரமும் சவுக்குசங்கரை இன்னமும் ஏன் என்கவுண்டர் செய்யவில்லை, அண்ணாமலையை கைது செய்ய இயலவில்லையே என்ற கவலை தான். கேரளாவிலும் கருநாடகாவிலும் இந்தியா புள்ளி கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது. அவர்களுக்கு நெருக்குதல் தர ஸ்டாலினால் முடியாது. அதனால் இந்த பேமானிகளை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்.


s chandrasekar
மே 29, 2024 09:30

Veeran, gothumai beer are now available . People are happy.


raja
மே 29, 2024 06:14

எங்களுக்கு போதை பொருள் கடத்தனும் தமிழக கனிம வளத்தை சுரண்டி கொள்ளை அடிக்க வேண்டும்.. கொள்ளை அடித்த பணத்தை வெளிநாட்டில் கொண்டு போய் மீண்டும் தமிழகத்தில் முதலீடு என்றபெயரில் கொண்டுவர குடும்ப சுற்றுலா செல்ல வேண்டும்... மேலும் நானும் திராவிடன் அவனும் திராவிடன் சாக போறது தமிழன் தானே... இப்படிக்கு ட்ரக் மாஃபியா குடும்ப DMK கொள்ளை கூட்டம்...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ