வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கடந்த வருடம் மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த +2 படித்த மாணவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் ரத்த வாந்தியுடன் தேர்வு எழுத்திட்டு வேலூர் CMC ஆஸ்பத்திரியில் சேந்தார். ஆனால் வேலூர் CMC ஆஸ்பத்திரி கல்லீரல் நோய் சிகிச்சைக்கு சிறந்த ஆஸ்பத்திரியல்ல என்று தெரிந்தும் ஏழை மக்களின் பணத்தை உரிவதற்காக அந்த ஆஸ்பத்திரியில் கல்லீரல் நோய் சிகிச்சை பிரிவை வைத்திருக்கிறார்கள். அந்த மாணவரின் பெற்றோர் வயல் நிலத்தை விற்று, வீட்டை விற்று, வட்டிக்கு பணம் இப்படி எல்லா பணத்தையும் வேலூர் CMC க்கு அழுதார்கள். கடைசியில் அந்த மாணவர் இறந்து போனார். என் தம்பியும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து கடைசியில் இறந்துவிட்டார். அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஒருவர் கூட கல்லீரல் நோயிலிருந்து பிழைக்கவில்லை. கல்லீரல் நோய் சிகிச்சை பிரிவை வைத்திருக்கிறார்களோ?
பாவம் அந்த மகள். இதுதான் நமது மக்கள் கல்விக்கு தரும் முன்னுரிமை. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த மகளுக்கு.
தேர்வு என்பது கடமை என்பதை மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்கிறார்கள். அதிகாரிகள் தன் கடமையை தவறாது செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்த வருடம் கூட பரீட்சை எழுதி கொள்ளலாம். அப்பா என்ற உறவு இனிமேல் கிடைக்காது... ஏதோ ஒரு தற்குறி அப்பா கெடக்கறார் நீ போயி பரீட்சை எழுதுன்னு சொல்லி இருக்கும் .... இப்போ அன்பு பாசம் உறவு மனிதாபிமானம் என்பதெல்லாம் என்ன என்று கேட்கும் அளவில்தான் உள்ளது.. இதெல்லாம் அந்த சிறுமிக்கு புரிய வைக்காம பரீட்சை எழுத அனுப்பிவைப்பது கேலிக்கூத்து.. வெத்து விளம்பரத்திற்கு செய்யும் செயல் ... நாளைய தலைமுறை இந்த வாழ்க்கை முறையை அறிய வில்லை என்றால் வெறும் மிருகங்களாக தான் இருப்பார்கள் ... பிறகு இந்த காலத்தில் அப்பா அம்மா வை மதிப்பதில்லை பெரியவர்களை மதிப்பது இல்லை என கூப்பாடு போடுவதில் பிரயோஜனம் இல்லை ....
ஏதாவது வித்தியாசமான கருத்தை பதிவு செய்ய வேண்டும் என நினைத்து உங்களது அறிவிழித்தனத்தை பதிவு செய்யாதீர்...இந்தப் பெண்ணின் அப்பாவே இச்சூழல் வந்தாலும் படித்து நல்ல முறையில் முன்னேற தான் விரும்புவார்...பரீட்சை முடிந்ததும் இறுதி சடங்கு நல்ல முறையில் நடைபெறப் போகும் நிலையில், பரீட்சை அடுத்த வருடமெழுதலாம் என பதிவிடுவது உச்சகட்ட அறிவிலித் தனம்...
அருமையான பதிவு சிவா.
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மனித நேயம் மற்றும் உறவின் பெருமையை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸில் சென்று தேர்வு எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். மாநிலம் முழுவதும் பல ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில் குடும்பத்தில் இறப்பு, விபத்து, சில மாணவர்களுக்கே கடும் காய்ச்சல் போன்ற காரணங்களால் தேர்வு எழுதமுடியாத சூழல் ஏற்படும்.. இதுபோன்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஒருவாய்ப்பு தேர்வு எழுத கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன் அதனை பயன்படுத்தி அந்த வருட கல்வியாண்டிலேயே மேற்படிப்பு சேரலாம்.. மனவேதனையுடன் தேர்வுக்கூடம் செல்ல தேவையில்லை..
ஆழ்ந்த அனுதாபங்கள் மாணவிக்காக உங்கள் எதிர் கால வாழ்க்கையில் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன்
God bless you
என்னுடைய அனுதாபங்கள் .
இறப்பு என்பது சோகமான அவர்கள் குடும்ப விஷயம். பள்ளி தேர்வு மட்டும் மாணவர் வாழ்க்கையை முடிவு செய்யாது..அது எந்த தேர்வானாலும் சரி..இதை எதுக்கு பெரிதுபடுத்தி விளம்பரம் கொடுத்து தேர்வு என்று மாணவரை பயமுறுத்தனும்??
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய சிறுவயதில் ரஞ்சி டிராபி மேட்ச் விளையாட்டின்போது அவர் தந்தை இறந்துவிட்டார். அவருடைய அம்மா, உனக்கு விளையாட்டு முக்கியம் என்றால் விளையாட செல், அல்லது அப்பா முக்கியம் என்றால் இங்கேயே இரு என்று சொன்னார். நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சொன்னார். விராட் இதேபோன்று தந்தையின் இறந்த உடலை வணங்கிவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றார் என்று ஒரு செய்தி நான் சமீபத்தில் படித்தேன்.