மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
சென்னை : ''ரேஷன் அரிசி, கலப்பட டீசல், காஸ் சிலிண்டர் கடத்தல் மற்றும் சட்ட விரோத விற்பனை தொடர்பாக, ஐந்து மாதங்களில், 4,632 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் கூறினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, ஐந்து மாதங்களில், 3,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன; 1,264 டன்ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு, 71 லட்சம் ரூபாய். மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக, ஏழு வழக்குகள் பதிவாகி, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 790 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதேபோல, சட்ட விரோதமாக விற்கப்பட்ட, 580 காஸ் சிலிண்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 686 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். கலப்பட டீசல் தொடர்பாக, 13 வழக்குகள் பதிவு செய்து, 5.07 லட்சம் லிட்டரை கைப்பற்றினோம்.இந்த ஆண்டில், ஐந்து மாதங்களில், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் கலப்பட டீசல் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, 4,410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,632 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 36 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago
11 hour(s) ago