உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஸ் சிலிண்டர் சோதனை இனி இலவசம்; டெலிவரி ஊழியர் செயலியில் பதியலாம்

காஸ் சிலிண்டர் சோதனை இனி இலவசம்; டெலிவரி ஊழியர் செயலியில் பதியலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. இனி, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே சோதனை செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். ரெகுலேட்டர் இயக்கத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதை ஏஜென்சி ஊழியர்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்தனர்; 200 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.தற்போது, எண்ணெய் நிறுவனங்கள், காஸ் இணைப்புகளை சோதனை செய்ய எட்டு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளன.அதன்படி, சிலிண்டரில் இருந்து காஸ் அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம், சிலிண்டர் இயக்கம், அவசர எண் '1906' குறித்த விழிப்புணர்வு, சமையல் அறையில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் குறித்து, டெலிவரி ஊழியர்களே ஆய்வு செய்வர்.விவரங்களை, ஊழியர் தன் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின், வாடிக்கையாளரின் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, ஒ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண் வரும். இதற்கு பின், சோதனை முழுமை பெறும். இந்த சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகியவற்றின் பாதிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் யாரும் தகவல் தருவதில்லை. இதனால் ஏற்படக் கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தற்போது டெலிவரி ஊழியர்கள் உதவியுடன் ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன் செயலியில் வாடிக்கையாளரின் சிலிண்டரில், எந்த தேதியில் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் பொருத்தப்பட்டது என்பது உள்ளிட்ட, சிலிண்டர் தொடர்பான அனைத்து தகவலும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து, ரப்பர் குழாய் மாற்றுவது உள்ளிட்டவை இனி, எளிதாக நடந்தேறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

A. Kumar
ஏப் 24, 2024 12:26

Super?


CHAMUNDEESVARAN N
ஏப் 24, 2024 11:57

ANOTHER MANDATORY OPTION TO COLLECT PAYMENT FROM CUSTOMER


Muguntharajan
ஏப் 24, 2024 10:50

இது ஒன்றும் இலவசமாக இருக்காது ஊழியர்கள் இதற்கு நிச்சயம் பணம் கேட்பார்கள் தற்போது சிலிண்டர் டெலிவரிக்கு வாங்குவது போல


K.n. Dhasarathan
ஏப் 24, 2024 10:14

ஐயா காஸ் சிலிண்டர் கொடுக்கும்போது இரண்டுமுறை டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது, காஸ் க்கான பணம் கொடுக்கும்போது டெலிவெறிக்கான பணத்தையும் நிறுவனமே வசூல் செய்து கொள்கிறது, பின்பு டெலிவரி செய்பவரும் வசூல் செய்கிறார், ஏன் இப்படி? காஸ் நிறுவனங்கள் டெலிவெறிக்கான பணம் சேர்த்துவாங்குவதை நிறுத்த வேண்டும் நுகர்வோர் டெலிவரி செய்பவரிடம் கொடுத்துக்கொள்கிறோம், காஸ் நிறுவனங்கள் டெலிவரி பணம் சேர்த்து வாங்குவதை நிறுத்துமா?


ديفيد رافائيل
ஏப் 24, 2024 09:47

அப்போ நீயே இந்த மாதிரி வேலையை பாத்துக்க வேண்டியது தானே


Ramesh Sargam
ஏப் 24, 2024 07:41

இந்த சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது ஆனால், டெலிவரி ஊழியர்கள் கட்டாயம் tips வாங்காமல் நகரமாட்டார்கள்


ssh
ஏப் 24, 2024 07:13

காஸ் ஏஜென்சிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்


rama adhavan
ஏப் 24, 2024 06:45

நல்ல திட்டம்


krishnamurthy
ஏப் 24, 2024 07:55

மிக நல்ல திட்டம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி