உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் 51, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கமுதி செட்டியார் தெருவை சேர்ந்த கண்ணன் 51. இவர் கே.பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். நேற்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் டூவீலரில் பள்ளிக்குச் சென்றார்.பாப்பாங்குளம் விலக்கு ரோட்டில் காலை 8:00 மணியளவில் சென்ற போது கண்ணனை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால்​ வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.கண்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் இதில் ஏற்பட்ட பிரச்னையால் கொலை செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்ணனுக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ramarajpd
ஜூன் 11, 2024 17:07

திராவிட மாடலில் அமைதிப் பூங்கா ??


Kasimani Baskaran
ஜூன் 11, 2024 15:05

ஞாயமான சம்பளம் கொடுத்தும் கூட அதிகமாக சம்பாதித்து அள்ளிவிட வேண்டும் என்ற ஆசை யாரை விட்டது.


lana
ஜூன் 11, 2024 13:08

இவங்க அமைச்சர்கள் மட்டும் அமைச்சர் வேலை விட படம் எடுப்பது சாராயம் காய்ச்சுவது செய்யலாம் வாத்தியார் வேறு வேலை செய்தால் தவறா


Ramesh Sargam
ஜூன் 11, 2024 12:04

ஆசிரியருக்கு எதற்கு இந்த ரியல் எஸ்டேட் விவகாரம்? ஒன்று நேர்மையாக ஆசிரியர் தொழில் புரியவேண்டும். அல்லது நேர்மையில்லாத அந்த ரியல் எஸ்டேட் பணியில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இந்தக்காலத்தில்தான் ஒரு சென்ட் நிலத்திற்கு ஆசை, இல்லை இல்லை பேராசை அந்த நிலத்தின் மீது. உயிர் போனபிறகு புதைக்க ஒரு ஆறடி நிலம்.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 11:14

அரசு மிகக் குறைவான சம்பளம் தருவதால் வேறு வழியின்றி கந்து வட்டி, ரியல் எஸ்டேட், சிட் பண்டு போன்ற சைடு பிசினஸ்களை நடத்துகின்றனர். விடியல் கருணையுள்ளத்துடன் சம்பளத்தை உயர்த்தி உதவ வேண்டும்.


Lion Drsekar
ஜூன் 11, 2024 11:02

ஒரு புறம் கவலையாக இருந்தாலும் மற்றொருபக்கம் சிலர் அரசு வேலையை மட்டும் பார்க்கிறார்கள் பலர் தானே நேரில் தங்களுக்கு தெரிந்த மற்றும் அனுபவமுள்ள தொழில்களை தன் மனைவி மற்றும் தன் குடும்பத்தார்கள் பெயரில் செய்தும் வருகிறார்கள், இது இன்றல்ல நேற்றல்ல பல தலைமுறைகளாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதனாலதான் ஒரு சில இடங்களில் தவறுகள் நடைபெறுகின்றன. வந்தே மாதரம் .


M Ramachandran
ஜூன் 11, 2024 10:33

நாளொரு கொள்ளையும் பொழுதொரு கொலையும் இது தான் தமிழ்நாடு


Dharma Raj
ஜூன் 11, 2024 09:25

தலைமை அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் இதுவும் ஒரு சாதனையே என்று நோட்டீஸ் அடித்து ஒட்டினாலும் ஒட்டுவார்கள் அவ்வளவு கேவலமாக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது


sethu
ஜூன் 11, 2024 09:04

அவர் திருநீர் அணிந்துள்ளார் அதனால் அந்த பனி இடத்தில் ஒரு பாஸ்டர் நியமிக்கப்படுவார், தோத்திரம் தரித்திரம் பிடித்தவன் ஆட்சியில் மக்களின் வாழ்க்கையும் தரித்திரமாக மாறுகிறது


raja
ஜூன் 11, 2024 08:56

எலே சம்முவம்... திருட்டு திராவிட மாடல் ன்னு வர்றப்ப... கொலை ... கொள்ளை ... கஞ்சா .... கடத்தல் .. போதை மருந்து ... டாஸ்மாக் ... கற்பலிப்பு... சட்டம் ஒழுங்கு ... எட்ரா வண்டிய..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை