உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை: தமிழக அரசு புகார்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை: தமிழக அரசு புகார்

புதுடில்லி: 'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்து வதற்கான கோப்புகளை, தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்திருக்கிறார்' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன் என்பவர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான விஜய் நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை, 2022ல் போலீசார் கைது செய்தனர். பின், உச்ச நீதிமன்றத்தை அணுகி ராஜேந்திர பாலாஜி ஜாமின் பெற்றார்.இந்நிலையில், புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி, கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதற்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி சார்பில், மூத்த வழக்கறிஞர் கிரி ஆஜராகி, வழக்கு தொடர்பான விபரங்களை எடுத்துரைத்தார். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் வாதங்களை கேட்பதற்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஏற்கனவே இந்த விவகாரத்தில், தமிழக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். சம்பந்தப்பட்டவர் முன்னாள் அமைச்சர் என்பதால், தமிழக கவர்னரிடம் ஒப்புதல் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்தோம். கடந்த பிப்ரவரியில் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தும், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்' என்றனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.n. Dhasarathan
மார் 01, 2025 23:23

ஆளுநர் ராவி என்னும் ஆர் ஸ் ஸ் ரவி அவர்களே ஊழல் வழக்கிற்கு ஒப்புதல் தரவில்லை என்றால் ஊழலுக்கு நீங்களும் உடந்தை என்றுதானே பொருள். அப்படியா ? உங்கள் வேலைகளை நீங்கள் பார்க்கமாடீர்களா ? இதுவரை மூன்று முறை உச்ச நீதிமன்றம் உங்கள் தலையில் கொட்டு வைத்ததே, இன்னும் திருந்தலையா ? மறுபடி உச்ச நீதி மன்றத்தில் கொட்டு வாங்கணுமா ? ஆளுநர் பதவிக்கு அவமானம் இல்லையா ? பதவிக்கு பேர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவமானம் கிடைக்க விடாதீர்கள், இன்னும் எத்தனை கோப்புகள் இப்படி நிலுவையில் உள்ளன ?


K.Ramakrishnan
மார் 01, 2025 18:39

கவர்னர் ரவி, பா.ஜனதாவின் கொள்கை பரப்பு செயலாளர். அதிமுக, பா.ஜ.வின் பி டீம் ஆகவே இன்னமும் செயல்படுகிறது. எனவே அதிமுக மாஜி மீது வழக்கு தொடர கவர்னர் எப்படி அனுமதி தருவார்? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?


Oviya Vijay
மார் 01, 2025 17:38

இவர் மோடி இந்தியாவுக்கே டாடி என கூறிய முன்னாள் அமைச்சராயிற்றே... அவ்வாறு இருக்கையில் இவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பர்... மேலும் அதிமுக எப்படியாவது எப்படியாவது தன் கடைக்கண் பார்வையை கூட்டணி பேச்சுக்காக தங்கள் கட்சி பக்கம் திருப்பி விடாதா என ஏக்கத்துடன் மாநிலம் முதல் சென்ட்ரல் வரை காத்துகொண்டிருக்கும் வேளையில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எப்படி அனுமதி கிடைக்கும்... கவர்னர் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் தான் அனைத்து மாநில கவர்னர்களின் கொட்டம் அடங்க போகிறது. சட்டமன்றம் அனுப்பும் கோப்புகளின் மீது கவர்னர் முடிவு எடுக்க ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவினை கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்கும் என நம்புகிறேன். பார்க்கலாம்...


ஆரூர் ரங்
மார் 01, 2025 11:15

பொன்முடி மீது ஊழல் வழக்கு போட்ட தமிழக CB CID போலீஸ் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க முயற்சிக்கவில்லை. தண்டனைக்கு தடையாணை கொடுத்தால் மாநில போலீஸ் மேல்முறையீடு செய்யாது என்பது நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரை அமைச்சராக நியமிக்க அழுத்தம் கொடுக்க நீதிமன்றம் எதற்கு? அரசியல் எதிரிகள் மீது மட்டும் மும்முரமாக வழக்கு போடும் அரசுக்கு கவர்னர் ஏன் ஒத்துழைக்க வேண்டும்? அப்பழுக்கற்ற அரசியல் நடக்க வைக்க நியாயமான, சுறுசுறுப்பான நீதித்துறையால் மட்டுமே இயலும்.


ஆரூர் ரங்
மார் 01, 2025 11:05

ஒரே வழக்கில் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட நபர்களை விட்டுவிட்டு வேண்டாத நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது வழக்கமாகி விட்டத கவர்னர் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார்? சிதைக்கப்பட்ட செந்தில் பாலாஜி லஞ்ச வழக்கை முழுக்க சிபிஐ வசம் ஒப்படைக்க கவர்னர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 01, 2025 09:38

அதானே ?? அரசியல் பழிவாங்கலை நிறைவேத்த உதவத்தானே கவர்னர் இருக்காரு ??


GMM
மார் 01, 2025 07:51

நிர்வாகத்தில் அரசியல் நிலுவையில் உள்ள ஊழல் விவரங்கள் மொத்தமாக மாநில நிர்வாக பரிந்துரையை கவர்னர் முடிவுக்கு வழங்க வேண்டும். ஒப்புதல் தர வேண்டும் என்றால் கவர்னர் பதவியினை மட்டு படுத்துவது போல் ஆகும். விசாரணை தான் தனித்தனியாக இருக்கும். மற்ற எவருக்கும் எதிராக வழக்கு இல்லை என்று மாநில நிர்வாகம் கவர்னருக்கு உறுதி கூற வேண்டும். கவர்னருக்கு எதிராக ஜனாதிபதி அனுமதி இல்லாமல் எந்த நீதிபதியும் புகாரை ஏற்க , விசாரிக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை