உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம்

கவர்னரின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம்

கிண்டி:கவர்னர் ரவியின் கார் ஓட்டுநர், மயங்கி விழுந்து மரணமடைந்தார்.புதுச்சேரியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 54; கிண்டி, கவர்னர் மாளிகையில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி, கவர்னர் ரவிக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்தார். அவர், நேற்று காலை, வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்றபோது, மயங்கி விழுந்தார்.வீட்டில் இருந்தோர், அதே வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரை துாக்கிச் சென்றனர். பரிசோதனையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ