உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ' தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் முதல்வர் ஸ்டாலின் இருந்திருக்கிறார்.

துஷ்பிரயோகம்

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும். முதல்வர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ananth VR
ஜூலை 26, 2024 14:49

எப்படி குஷ்பூ வை மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்த மாதிரியா.


NAGARAJAN
ஜூலை 26, 2024 12:37

பாஜக ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் கிடையாதே


Subramanian Srinivasan
ஜூலை 26, 2024 09:50

ஏன் ஆடு. ஒன்றியத்தில் ஆட்சி செய்பவன் முக்கிய பதவிகளில் எல்லாம் சிபிஐ, வங்கி, நீதித்துறைகளில் முழுக்க குஜராத்திகள், சங்கிகளை பதவியில் வைத்து சீரழித்துக் கொண்டிருக்கிறான் முதல்ல அதை பற்றி பேசு.


S. Narayanan
ஜூலை 25, 2024 21:15

அரசு பதவி பெறுபவர்கள் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். எல்லாம் 2026 படுத்தும் பாடு


ulaganathan murugesan
ஜூலை 25, 2024 21:00

how to got post governor to tamilizai? she is bjp.


Godyes
ஜூலை 25, 2024 20:12

பாஜக சீனியர்கள்.வடநாட்டில் உள்ளனர் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டில் எப்படி கட்சி நடத்துவது இது உனக்கு தெரியாதா.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 19:29

இதற்கு முன்பே திமுக வின் கட்சி விதிகளை உருவாக்கித் தந்த VP ராமன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப் பட்டார். அவர் கருணாநிதியின் சொந்தவழக்குகளில் ஆஜரானவர் . இப்போது அவரது மகன் PS ராமன் அதே பதவியில் இருக்கிறார். ஒரு கழக மாவ‌ட்ட‌ செயலாளரை நீதிபதியாக ஆக்கினார்.


vaiko
ஜூலை 25, 2024 20:47

மல்யுத்த வீராங்கனைகளை கற்பழித்தவரை பதவியில் வைத்து அழகு பார்த்தவர் நம்மவர் தானே.


Mohanakrishnan
ஜூலை 25, 2024 18:36

தமிழ் படிக்க தெரியவில்லை என்றால் சுடலையிடம் துண்டு சீட்டு வாங்கி எழுதவும். ௧. அரசு பதவி ௨. கட்சி பதவி இது தெரியாமல் திருட்டு மாடல் மாதிரி உளற கூடாது


Barakat Ali
ஜூலை 25, 2024 18:29

இஷ்டம்போல கொள்ளையடிக்க, சுரண்டிக்கொழுக்க மக்களே ஆதரவு கொடுத்திருக்காங்க ...... உங்களுக்கென்ன அண்ணாமலை ????


venugopal s
ஜூலை 25, 2024 17:50

மற்ற மூத்த தலைவர்கள் எத்தனையோ பேர் இருந்த போது அண்ணாமலை எப்படி பாஜகவில் சேர்ந்தவுடன் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்? அது போல தான் இதுவும், போவியா, இவர் பெரிய யோக்கியர் போல் பெரிசா நியாயம் பேச வந்து விட்டார்!


Sudarsan Ragavendran
ஜூலை 25, 2024 18:21

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம், அது கட்சி பதவி.. சுடலை குடுத்தது அரசு பதவி.. ரெண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியாம நீ எல்லாம் ஏன் கருது எழுத வர... வாங்கற காசுக்கு வேற கமெண்ட் போடுங்க


Thiyagarajan S
ஜூலை 25, 2024 18:23

மற்ற எத்தனையோ சீனியர்கள் தகுதி இருந்தும் உதயாவுக்கு தேர்தலில் சீட்டு குடுத்தாங்களே அது மாதிரி...துரை முருகன், பொன்முடி, நேரு, ஐ பெரியசாமி கண்ணப்பன்போன்று எத்தனையோ மந்திரிகள்


பாலா
ஜூலை 25, 2024 18:39

சிறிது சிந்தித்து கருத்திடவும். அரசு பதவியும் கட்சி பதவியும் ஒன்றல்ல. இது அதிகார துஷ்பிரயோகம்.


G Mahalingam
ஜூலை 25, 2024 19:18

அரசு பதவிக்கும் கட்சி பதவிக்கும் வித்தியாசம் தெரியாமல் பதிவு போட கூடாது. அவருக்கு தகுதி என்ன இருக்கு. திமுகவின் அடிமையை தவிர ஒரு தகுதியும் இல்லை.


r ravichandran
ஜூலை 25, 2024 20:55

அரசு பதவிக்கும், கட்சி பதவிக்கும் வேறுபாடு தெரியாத உங்களை போன்ற தற்குறி தான் திமுகவின் பலம்.


Barakat Ali
ஜூலை 26, 2024 16:22

அரசு பதவியும் கட்சி பதவியும் ஒன்றா ? டீம்கா வின் அல்லக்கைஸ் க்கு அங்கேதான் மூளையை வைத்துவிட்டான் இறைவன் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை