மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13
சென்னை:முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு, 10 துறைகள் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை நிறுத்தி வைத்துள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீதம், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டின் கீழ், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளில் அரசு டாக்டர்கள் விரும்பும் துறைகளை தேர்வு செய்து படித்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.இதற்கிடையே, முதுநிலை மருத்துவப் படிப்பு களில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு, இனி பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம். மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட, 10 முதுநிலை படிப்புகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், அதில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் என்றும், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால், காது - மூக்கு - தொண்டை, தோல், கண், மனநலம், சர்க்கரை அவசர மருத்துவம் உள்ளிட்ட 20 துறைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டில், 10 துறைகளில் மட்டுமே சேர முடியும் என்ற அரசாணை 151ஐ, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் செயலர் ராமலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 32
6 hour(s) ago | 13