சென்னை : நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 42 டிகிரி செல்ஷியஸ்; அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநில அளவில், 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.கோவை, மதுரை நகரம், திருப்பத்துார், பாளையங்கோட்டை, திருத்தணி, வேலுார், 38; மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி, 39; நாமக்கல், 40; ஈரோடு, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.குன்னுார், கொடைக்கானல், 21; ஊட்டி, 25; வால்பாறை, 29; கடலுார், சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், நாகை, துாத்துக்குடி, 35; மீனம்பாக்கம், தர்மபுரி, கன்னியாகுமரி, பாம்பன், புதுச்சேரி, 36; தஞ்சாவூர், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில், 7 செ.மீ., மழை பெய்தது. மாநில அளவில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல் 7 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.