மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
மதுரை, : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சீரமைப்பு ஒப்பந்தப் பணி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கண்ணன் தாக்கல் செய்த மனு:வைகை அணை மதகு கதவுகளை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. விண்ணப்பித்தேன். நிராகரிக்கப்பட்டது. மதுரை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பெரியாறு-வைகை பாசன கண்காணிப்பு பொறியாளராக இருந்த தனபாலன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயலருக்கு 2018ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: தனபாலனின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேறொருவருக்கு சாதகமாக ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது. அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமன்றி தகுதியுடைய மனுதாரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்து. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: 'பதவியை தவறாக பயன்படுத்தவில்லை. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தவறானவை. 2017 ல் நடந்த ஏலத்தில் மனுதாரர் பங்கேற்றார். அப்போது அவர் ஆட்சேபனை எழுப்பவில்லை. ஏலத்திற்குரிய தகுதிகளை அவர் பூர்த்தி செய்யவில்லை,' என தனபாலன் தரப்பு தெரிவித்தது. தனபாலன் 2018 ஜூன் 30ல் பணி ஓய்வு பெற்றார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை துவங்க முடியாது.முறைகேடு நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதாக மனு செய்துள்ளதை கருத்தில் கொண்டு, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மூத்த அதிகாரியை பொதுப்பணித்துறை செயலர் நியமிக்க வேண்டும். ஒப்பந்த பணியை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தெரியவந்தால் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி மனுதாரர் தீர்வு காணலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago
11 hour(s) ago