வாசகர்கள் கருத்துகள் ( 31 )
பிறவி உண்டா என்பதே நம்பிக்கையற்ற சொல்
வாங்கோ.. வாங்கோ. உமது பூர்வஜன்ம புண்ணியத்தால் ஒரு வருஷமாவது ஜெயிலில் களி தின்னும் வரம் கிடைக்க வாழ்த்துக்கள். நாக்கில் சனி வந்து உக்காந்து படாத பாடு படுத்தரான்.
மஹா விஷ்ணு கூறிய கருத்துக்கள் பள்ளியில் பேசவேண்டிய இடம் இல்லை. குறிப்பாய் மாற்று திறனாளிகள் உள்ள இடத்தில குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பதிலாக பதில் கூற அனுமதித்துஇருக்கலாம். கிருத்துவின் பரிசுத்த ஆவி காப்பாற்றும் என்று சொல்வதை நம்புவர்கள் இருக்கின்றனர். இதனை கிருத்துவ மதத்தை சார்ந்தவர் ஆன்மிகவாதி பள்ளியில் கூறியிருந்தால் தவறு. பொதுவாய் எல்லோரும் கூறுவது தப்பு செய்பவனை தப்புக்கு உரிய தண்டனை கடவுள் அளிப்பார் என்று கூறுகிறோம். நம்பிக்கையுள்ளவன் நம்புகிறான்.
ஆவியில் இட்லி கூட வேகாது. எல்லாம் பொழப்புக்கான வழி.
போலி நாத்திகம்,பகுத்தறிவு போர்வையில் செயல்படும் அல்லேலூயா அரசு ஹிந்து தர்மத்தை மக்களை கேவலப்படுத்தி ரசிக்கிறது... ஹிந்து ஆன்மிக போதனை தவறு என்றால், பைபிள் விநியோகம் ஊக்குவிப்பு செய்வதன் நோக்கம் என்ன? பள்ளிகளில் நாத்திக பிரசாரம் செய்வதும் தவறுதான்.. குல்லா கும்பல் சிலுவை கும்பல் நாஸ்திக தேசதுரோக ஒழுக்கம் அற்ற கும்பலின் பிடியில் உள்ள தறுதலை தமிழ்நாடு என்றைக்கு உருப்படுவது ?
இவன் கிருஸ்தவ மிஷநரிகளின் கைக்கூலி
மக்களை ஏமாற்றும் இன்னொரு போலி ஆன்மீகவாதி!
இதே காரியத்தை பகுத்தறிவாளர்கள் சேர்த்து அதை ஒரு இந்து ஆசிரியர் கேள்வி கேட்டிருந்தால் பரிசாக இடை நீக்கம் செய்யப்படுவார் அது சரி அய்யா அல்லக்கை நடிகர் சூரி மதுரை மருத்துவமனையில் தனியார் அறக்ஙகட்டளைமூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும்அன்னதானத்தை அல்லக்கை அதிகாரிகளுடன் சேர்ந்துதடுத்த முயற்சிகளை நேரிடையாக விசாரித்து உண்மை வெளியிடவேண்டும் ஒரு சார்பு நிலையை பாரம்பரிய மிக்க தங்கள் நாளிதழ் எடுக்க வேண்டாம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மக்கள் கருத்துக்களையும் பதிவிடவும் 60ஆண்டு கால வாசகன் என்ற முறையில் வைக்கும் வேண்டுகோள் இது
இது உண்மையெனில், இந்த நடிகர் மிக கீழ்த்தரமான கருங்காலி . வன்மையாக கண்டிக்கத்தக்கது .
கல்வியறிவு , கடுமையான உழைப்பு , கடவுள் அருள் , நேர்மையான வாழ்க்கை , நல்லவை செய்தல் - இவற்றின் மூலம் தான் வளரவும் உயரவும் முடியும் . மாறாக போன ஜென்மத்தின் பாதிப்பு , தாக்கம் தான் உன்னுடைய இன்றைய வாழ்க்கையை முடிவு செய்கின்றன என்பதும் , மறு ஜென்மத்தை பற்றிய பயத்தை உன்டாக்குவதும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் . ஆனால் பள்ளி மாணவர்களுக்கு போன ஜென்மம் மறு ஜென்மம் போன்ற கருத்துக்களை சொல்வதால் அவர்களால் சுயமாக முன்னேற முடியாது என்ற எண்ணத்தையும் , கடவுள் நம்பிக்கையையும் சிதைத்து விடும் . இந்த இளம் துறவி இத்தகு பரப்புரையை தன ஆசிரமத்தில் அல்லது மேடைகளில் , மண்டபங்களில் தனது பேச்சுரிமை சட்டப்படி மணிக்கணக்கில் பேசலாம் .இவர் பெயர் தான் மஹாவிஷ்ணுவே தவிர இவர் ஒரு நல்ல கடவுள் பக்தியுடைய , கோயில் செல்லும் இந்துவே அல்ல . ஆசிரமம் அமைத்து பணம் சம்பாதிக்கும் திறமை உடையவர்.
பிறர்க்கு இன்னா செய்வது நன்றன்று
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களிலிருந்து ஹிந்து மதத்தைப் பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகளில் முக்கியமான் ஒன்று மறு பிறப்பு தத்துவம். இதர மதங்கள் ஒரே ஒரு பிறப்பு தான் மனிதனுக்கு உண்டு என்றும் அதில் ஒன்று உய்ய வேண்டும் அல்லது எடர்னல் ஹெல்லில் Eternal Hell முடிவற்ற நரகத்தில் ஆழ்ந்து அமிழ வேண்டும் என்று போதிக்கின்றன. ஆனால் நம்பிக்கை ஊட்டும் ஹிந்து மதம் உன் செயல்களால் பிறப்புகள் அமைகின்றன. நல்ல வினை மூலம் நீ ஒரு கால கட்டத்தில் நிச்சயம் முக்தி பெற முடியும் என்று சூக்ஷ்மமான ஸ்விட்சை நம் கையிலேயே கொடுக்கிறது. இதை பாரத தேசமெங்கும் உள்ள ஹிந்துக்கள் ஒப்புக் கொண்டு அதன் படி பாவ புண்ணியத்திற்குப் பயந்து வாழ்கின்றனர். தனக்கு ஒரு இழிவு நேரும் போதெல்லாம், 'தெரிந்தோ தெரியாமலோ நான செய்த பாவம். அதனால் இதை நான் அனுபவிக்கிறேன்' என்று மனத் தெளிவைப் பெறுகின்றனர். நல்லன வரும் போது பூர்வ ஜன்ம புண்ணிய்ம் என்று மகிழ்கின்றனர். நமது அற நூல்கள், மற்றும் இலக்கியங்கள் இந்த மறுபிறப்புத் தத்துவத்தை இடையறாது சுட்டிக் காட்டுகின்றன இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களில் வரும் நூற்றுக் கணக்கான மறுபிறப்புத் தக்வல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன இந்த பாரதப் பண்பாடு தான் - பின்னால் ஹிந்துப் பண்பாடு என்று அறியப்படுவது - பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த ஒரே பண்பாடு. இதை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்தப் பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகத் தான் தமிழர்களும் வாழ்ந்து வரலாறு படைத்திருக்கின்றனர். எடுத்துக் காட்டிற்குத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம். எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் குறள் 62 பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு குறள் 107 தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர். ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து குறள் 126 ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து குறள் 398 ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும். புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் குறள் 538 பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அன்று குறள் 835 முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து முடிக்க வல்லவன் கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார் மற்றீண்டு வாரா நெறி குறள் 356 கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர். வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் குறள் 38 ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும். ஆக இப்படி வள்ளுவர் மறுபிறப்பிற்கு உரிய முறையில் தன் குறளில் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய செய்திக்ளை எல்லாம் சொல்லி விட்டார். நமது வள்ளுவரை கிறிஸ்தவராகக் காட்ட முயற்சி செய்து எழுந்த நூல்களும் உண்டு. அப்படிப்பட்ட முயற்சிகளை இந்த மறுபிறப்புத் தத்துவம் ஒன்றே தகர்த்து விடுகிறது. அப்படிப்பட்ட முயற்சிகளை எள்ளி நகையாடும் போதே, வள்ளுவரைத் 'தம்மவராக' ஒவ்வொருவரும் காட்டும் அளவு தமிழ்க் குறள் உயர்ந்துள்ளது என்ற பெருமையை நினைத்து மனம் மகிழ்கிறோம். எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஹிந்துப் பண்பாட்டை மிகச் சரியாக முத்திரைக் குறட்பாக்களினால் வலியுறுத்திய ஒரு தமிழ் மஹானைச் சிரம் தாழ்த்தி வணங்கிக்கொண்டே இருக்கலாம். அவர் குறளைப் படித்து அதன் படி வாழ்வதே வாழ்நாள் வழி அடைக்கும் கல்லாக அமையும், இல்லையா