உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

மதுரை: 'நாங்கள் போராடி பெற்ற உரிமைகளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதாக அறிவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தது. இன்று, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அலுவலர் குழு அமைத்துள்ளது. அக்குழுவை உடனே திரும்ப பெற வேண்டும்.இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இது தான். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாங்கள் பெறும் உரிமைகளும், சலுகைகளும் போராடி பெற்றவை. எங்கள் உணர்வை புரிந்து, தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்ட தொடரிலேயே கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஏமாற்ற நினைத்தால், 2026 சட்டசபை தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.எங்கள் கோரிக்கைகளுக்காக, வரும், 12ல் புதிய காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கையில் ஊழியர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும் என, மாவட்ட கருவூலகங்களில் ஆர்ப்பாட்டம், வரும், 13ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் மாவட்ட தலைநகரில் மறியல், வரும், 19ல் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு வாழ்வூதியம் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், ஏப்., 17ல் வாழ்வூதியம் கோரி மாவட்ட தலைநகரில் பேரணி நடத்துவது, ஏப்., 24ல் காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சேலம் மாங்கா
மார் 10, 2025 19:22

அரசு ஊழியர்கள் வோட்டு தேவையில்லை தி மு க ஜெயிக்க.


Rajarajan
மார் 10, 2025 12:54

தனியார் நிறுவனத்தில், இப்படியொரு மிரட்டல் விட்டு, எந்த ஊழியராவது அடுத்தநாள் வேலையில் இருப்பாரா ?? அவர் குடும்பம் நிர்கதி ஆகும். அரசு ஊழியர்கள் government servant என்ற நிலை மாறி, government blackmailers என்று ஆகிவிட்ட பின்னர், பெரும்பாலான அரசு / பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விட என்ன தயக்கம் ?? இதற்குமேலும் அரசுக்கு அவமானம் தேவையே இல்லை. முதல்வர் என்ற பதவிக்கு இனி எந்த மரியாதையும் இல்லை என்பதே இவர்களின் இந்த கருத்து. இதைவிட கேவலம் முதல்வருக்கு ஒன்றுமில்லை.


Varadarajan Nagarajan
மார் 10, 2025 08:32

சங்கம் என்கின்ற பெயரை மாற்றி விட்டு, திராவிடம் அல்லது பெரியார் எனத்தொடங்கும் புதிய பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டு அப்புறம் இருக்கவே இருக்கு திமுக விற்கு ஆதரவு கொடுத்து விடுங்கள். உங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்கும். இப்பொழுது மட்டுமென்ன ஒவொரு தேர்தலிலும் மறைமுகமாக திமுக விற்குதானே வேலை செய்கின்றீர்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு மக்களுக்காகவா சேவைசெய்கின்றீர்கள்?


தமிழ்வேள்
மார் 10, 2025 08:26

திமுகவும் ஊழலும் போல, த.நா அரசு ஊழியரையும் லஞ்ச லாவண்யத்தையும் பிரிக்க முடியாது. இந்த கும்பல் உயிரில்லாமல் கூட இருக்கும். ஆனால் லஞ்சம் வாங்காமல் இருக்காது. திமுக வை பதவியில் ஏற்றிய பாவத்துக்கு இவர்களது அடுத்த பத்து தலைமுறையும் புழுத்து நாறி அழியும்..இது தமிழ் மீது ஆணை..


V Venkatachalam
மார் 10, 2025 07:19

ஆமாம். நாங்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம். அப்புறம் உங்களுக்கு எவனுமே கள்ள ஓட்டு போட முடியாது. அதனால் எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள். தேர்தல் வருகிறது தேர்தல் வருகிறது சொல்லிபுட்டோம்.. ஆமாம் சொல்லிபுட்டோம்..


Sundaran
மார் 10, 2025 07:17

இப்படி தான் வீர வசனம் பேசுவீர்கள் சில எலும்பு துண்டுகளை தூக்கி போட்டால் மறுபடியும் திருட்டு திராவிடத்தை தான் ஆதரிப்பீர்கள்.. இருவரும் ஊழலில் மூழ்கி முத்து குளிப்பவர்கள்


பிரேம்ஜி
மார் 10, 2025 07:12

என்ன விளைவுகள்? எல்லோரும் ராஜினாமா? முதலில் அதைச் செய்யுங்கள்! அப்புறம் போராடலாம்!


raja
மார் 10, 2025 07:01

எப்பா.. இன்னைக்கு விக்கு தினமாம்... அந்த விக்கு தலையனுக்கு முதல்ல வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் உங்க கோரிக்கைகளை கேட்டு போராடுங்க..


nagendhiran
மார் 10, 2025 06:23

சும்மா மிரட்டிட்டு விட்டுவிடுவீங்கல?


Appa V
மார் 10, 2025 06:07

மாசா மாசம் அரசுக்கு சம்பளத்துக்கு நிகராக பணத்தை கட்டிவிட்டு பெரும்பாலான அரசு வேலை செய்ய நிறைய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை


புதிய வீடியோ