உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்; பள்ளியில் அமைச்சர் பேச்சு; கெட்டியாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,

பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்; பள்ளியில் அமைச்சர் பேச்சு; கெட்டியாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு தான் இந்த ஜென்மத்தில் ஆண் குழந்தை பிறக்கும் என்று பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாவம்

பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர் காந்தி மேடையில் உரையாற்றினார். அப்போது, முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு மகன்களாகவே பிறக்கும் என்றும், புண்ணியம் செய்தவர்களுக்கே மகள்களே பிறக்கும் என பேசினார். அவரது இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ldd1g5z6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அன்பில் மகேஷ் அவர்களே

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த நாராயணன் திருப்பதி, 'முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார் அமைச்சர் காந்தி அவர்கள். ஆண்களாய் பிறப்பது பாவமா? இது மூட நம்பிக்கை பேச்சு இல்லையா? அரசு பள்ளியில் இப்படி பேசியதால் தானே மகா விஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுத்தீர்கள். உங்கள் ஏரியாவில் வந்து இப்படி பேசிவிட்டு சென்றிருக்கிற இந்த அமைச்சரை சும்மா விடுவீர்களா? கைது செய்ய வேண்டும் என வற்புறுத்த மாட்டீர்களா அன்பில் மகேஷ் அவர்களே?,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வலியுறுத்தல்

சென்னை அசோக் நகர் பள்ளியில் பாவம், புண்ணியம் பற்றி பேசியதால் பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தற்போது, அதேபோல, அமைச்சர் காந்தியும் சர்ச்சை பேச்சு பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Naga Subramanian
செப் 12, 2024 16:42

கிருபை பெற்றவர்கள் மற்றும் திமுக மட்டுமே ஊழ் வினைப் பயன் பற்றி பேசலாம். மற்ற யாரும் இதை பற்றி பேச அருகதை கிடையாது. அப்படி பேசினால் கைதுதான்.


S Regurathi Pandian
செப் 10, 2024 10:42

சரியான கேள்வி. அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Mani . V
செப் 10, 2024 05:47

ஆர். காந்தி கருணாநிதியைச் சொல்லவில்லை.


Mani . V
செப் 10, 2024 05:45

இந்த ஆர். காந்தியின் அப்பா முன் பிறவியில் எவ்வளவு பாவம் செய்தாரோ இப்படி ஒரு தத்தி ஆண் மகன் பிறக்க?


NATARAJAN R
செப் 09, 2024 21:46

திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமைச்சர் பேசியது தவறுதான். அதற்காக அவரை கைது செய்து விட முடியுமா? ஒரு விஷயத்தை ஒருவர் பேசினால், விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான காவலர்கள் சென்று, கைது செய்து, சிறையில் அடைப்போம். அதே விக்ஷயத்தை அமைச்சர் பேசினால், அமைதி காப்போம். புகார்கள் வந்து விட்டது எனில், விசாரணை நடைபெறுகிறது என்று சொல்லி புகாரை முடித்து விடுவோம். அல்லது புகார் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்வோம். மேலும் ஊடகம் பெரிதாக ஆக்கி விடும் நிலை வந்தால், முட்டு கொடுத்து காப்போம். அவ்வப்போது, நான் சர்வாதிகாரியாக மாறுவேன்என்று அரசு தலைமை எச்சரிக்கை மட்டும் தரப்படும். எவ்வளவு தவறு செய்தாலும், கட்சியில் பதவியில் இருக்கலாம். ஆனால் கைதானால் மத்திய அரசு காவல் துறை பதவி பறிப்பு உண்டு. ஜாமீன் கேட்டு வெளிவந்த உடன் பதவி தரப்படும். இதுபோல ஏராளமான அம்சங்கள்.


அப்புசாமி
செப் 09, 2024 21:38

சொந்த அனுபவத்தில் சொல்லியிருப்பாரு. பா.ஜ ஆளுங்களுக்கு விவஸ்தையே கிடையாது.


Velayu tham
செப் 09, 2024 20:00

ஐயோ என்னத்த சொல்ல...... எல்லாம் நேரம்,....... நம்ம தலையெழுத்து.....


INDIAN Kumar
செப் 09, 2024 16:40

அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமா மாடல் அரசு


INDIAN Kumar
செப் 09, 2024 16:39

பிறர்க்கின்னா முன் பகல் செய்யின் தமக்கின்னா பிட் பகல் தாமே வரும். வள்ளுவர் வாக்கு , யாரும் தப்ப முடியாது தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகா வேண்டும் இறைவன் கணக்கில் யாரும் தப்ப முடியாது.


INDIAN Kumar
செப் 09, 2024 16:31

முற் பிறப்பின் வினை இப்பிறப்பில் விடை , இது தான் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை