உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்; 2 எழுத்தர், பதிவாளர்கள் சிக்கினர்

பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்; 2 எழுத்தர், பதிவாளர்கள் சிக்கினர்

திருப்பத்துார் : திருப்பத்துாரை சேர்ந்த கயல்விழி என்பவர், ஆயிஷா என்பவருக்கு சொந்தமான, 1,800 சதுர அடி இடத்தை ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒரு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் விசாரணையில், அந்த முறைகேடு தெரிந்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக, பத்திரப்பதிவு ஆவண எழுத்தர், கொரட்டி கிராமத்தை சேர்ந்த மணியின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட பதிவாளர் பிரகாஷ் உத்தரவிட்டு உள்ளார்.அதுபோல, ஜோலார்பேட்டையை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவியின் சொத்தை, அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் பெயரில், ஆள்மாறாட்டம் செய்து கடந்த, 2007ம் ஆண்டு, ஜோலார்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக புகார் வந்தது.விசாரணையில் அந்த முறைகேடு அம்பலமானது. இதையடுத்து, அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, உடந்தையாக இருந்த, பத்திரப்பதிவு ஆவண எழுத்தர் சிரஞ்சீவியின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, மாவட்ட பதிவாளர் பிரகாஷ் கூறியதாவது:பத்திர எழுத்தர்கள், ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களை வைத்து, பத்திரப்பதிவு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசில் புகார் அளித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த பத்திரப்பதிவுக்கு துணை போன சார் - பதிவாளர்கள் இருவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை