உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்

யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் (நாம் தமிழர் கட்சி) இல்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தவில்லை. நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறது. 60 வருடமாக நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய ஹிந்தி திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3brdnmbm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சொந்த விருப்பம்

என்னை மீறி, முடிந்தால் ஹிந்தி மொழியை திணித்து காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவர் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம். விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள்.

அதை விட்டுருங்க

நான் பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது. அதை விடுங்கள், இது எனது கட்சி பிரச்னை.கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் இல்லை. அதை விட்டுருங்க. முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ethiraj
பிப் 27, 2025 10:20

Seeman good eye er in the society Little arrogance and egoistic is there which is bound to be there EVR exposed the Aura around his name has been wiped out


ராமகிருஷ்ணன்
பிப் 25, 2025 21:16

கட்சியை காப்பாற்ற ஒரே வழி பேசாம சீமாண்டியை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிரந்தரமாக சேர்ப்பது தான். அங்குள்ள மற்ற நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது.


தாமரை மலர்கிறது
பிப் 25, 2025 20:46

சீமான் அவர் கட்சியை பிஜேபியில் இணைத்துவிடுவது, அவரது எதிர்காலத்திற்கு நல்லது.


baala
பிப் 25, 2025 17:16

காலில் விழுந்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லையே


Madras Madra
பிப் 25, 2025 16:47

எந்த இயக்கத்துக்கும் மன வலிமை உள்ளவர்கள் மட்டுமே உண்மையாக நிலையாக இருப்பார்கள்


Nallavan
பிப் 25, 2025 15:14

தயவு செய்து உன் மனைவி உன் மகனிடமாவது உண்மையானவனாக நடந்து கொள் இல்லையே இவர்களும் உன்னை விட்டு சென்று விடுவார்கள்


Selvarajan Gopalakrishnan
பிப் 25, 2025 17:02

நீங்கள் எப்படி?


Narayanan
பிப் 25, 2025 15:01

சீமான் கட்சி உறுப்பினர்கள் விலகுவது உங்கள் கட்சி பிரச்சனைதான் . அது பொதுவெளிக்கு வந்தபிறகு கேள்வி வரத்தான் செய்யும் .தினம் தினம் இந்த விலகுவது தொடர்ந்துகொண்டு இருந்தால் கடைசியில் தொண்டர்கள் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியம் ?