வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாணவி நல்ல வழர்ப்பு வாழ்க அப்பனும் ஆத்தாரளும்
திருச்சி; திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, புள்ளம்பாடி பகுதியில் உள்ள ஐ.டி.ஐ.,யில், விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த ஏப்ரலில் மாணவி தாளக்குடி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது, கீழவளாடியைச் சேர்ந்த சிலம்பரசன், 22, என்ற கார் டிரைவர், மாணவியிடம் பேசி, நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள தன் நண்பர் அறைக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வீடியோ எடுத்து வைத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறியே, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது நண்பர்கள் உதவி உள்ளனர். மாணவி கர்ப்பமடைந்தார்.இதை மாணவி சிலம்பரசனிடம் கூற, அவர் கருகலைப்பு மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்தது. கடந்த, 3ம் தேதி, இதுகுறித்து, மாணவி, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் அளித்தார். லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் சிலம்பரசனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில், சிலம்பரசனின் நண்பர்களும் தன்னை மானபங்கம் செய்ததாக மாணவி கூறியிருந்தார். அது குறித்து விசாரணை நடக்கிறது.
மாணவி நல்ல வழர்ப்பு வாழ்க அப்பனும் ஆத்தாரளும்