உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:

பட்ஜெட்டில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.எனவே, நேற்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 30ம் தேதி அடுத்தக் கட்ட நடவடிக்கையை முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sampath kumar
மார் 15, 2025 16:54

2026 தேர்தல். நாளை நமதே 234 லும் நமதே...ஜாக்டூ ஜியூ


முருகன்
மார் 15, 2025 15:25

இவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும் கைநிறைய சம்பளம் பெறும் போது இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


ராமகிருஷ்ணன்
மார் 15, 2025 12:44

இந்த அமைப்பே திமுக அரசு சிதைத்து பல புல்லுருவிகளை வளர்த்து உள்ளது அவர்கள் மூலம் போராட்டங்களை பிசுபிசுத்துப் போக செய்து விடுவார்கள். சும்மான்காச்சி பம்மாத்து காண்பித்து வருகின்றனர். சம்பளத்தை விட பல மடங்கு லஞ்சம் வாங்கி சுருட்டும் இந்த கூட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.


saravan
மார் 15, 2025 08:19

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாமே...அரசு ஊழியர்கள் இளிச்சவாயர்கள் தானே...


sridhar
மார் 15, 2025 08:15

இன்னுமா இந்த ஊர் நம்பளை நம்புது - திமுக .


orange தமிழன்
மார் 15, 2025 07:53

இந்த அமைப்பே சரியில்லை......சும்மா நாடகம் ஆடுவது போல தெரிகிறது.......இந்த அமைப்பின் தலைவர்களை நம்பி தொடரும் மற்றவர்கள் பாவம்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை