மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 13
மதுரை:மதுரை விளக்குத்துாண் கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:மதுரையில் கதர் துறை அலுவலகத்தில் முதல்நிலை எழுத்தராக பணிபுரிந்தேன். தணிக்கையில் குற்றச்சாட்டு என் மீது எதுவும் இல்லை. காரணமின்றி 1988ல் சஸ்பெண்ட், 1999ல் பணி நீக்கம் செய்யப்பட்டேன். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.'பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசு புதிதாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என 2004ல், தனிநீதிபதி உத்தரவிட்டார்.அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. தனிநீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு 2008ல் உறுதி செய்தது.தமிழக காதி கிராம தொழில்கள் வாரிய தலைவர் விசாரித்து நிராகரித்தார். அதை ரத்து செய்து 'சஸ்பெண்ட்' மற்றும் பணி நீக்க காலத்திற்கு வட்டியுடன் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரணையை ஒத்திவைத்தார்.
2 hour(s) ago | 3
4 hour(s) ago | 33
7 hour(s) ago | 13