உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடிமையாக இருக்க மாட்டோம் தன்மானம் தான் முக்கியம்: இ.பி.எஸ்.,

அடிமையாக இருக்க மாட்டோம் தன்மானம் தான் முக்கியம்: இ.பி.எஸ்.,

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் நம்பிக்கை பேச்சு என்ற வகையில் ஒருவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார். அவர், அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே அவரை பள்ளிகளில் பேச அனுமதித்துள்ளனர். அந்த வகையில், அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும். மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து வீடியோ ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டிய நபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருவதாக பெருமைபட்டுக் கொள்கின்றனர். அது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் கார் பந்தயம் நடத்தி மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர் கஜானாவை காலி செய்து வருகிறார்.அ.தி.மு.க.,வுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அவர் விரும்பினால் மட்டும் போதுமா? பா.ஜ., தலைவராக இருப்பவர், அ.தி.மு.க., தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமையில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. எங்கள் கட்சி தலைவர்களைப் பற்றி அவதுாறாக பேசுகின்றனர். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றி - தோல்வி என்பது வேறு. தன்மானத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிட்டு, எங்கும் இறங்கிப் போகத் தேவையில்லை. எங்கிருந்தாலும், தன்மானம் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Muralidharan S
செப் 08, 2024 10:27

அதிமுக அழிவது நல்லது. தீயமுக அழிவது மிகவும் நல்லது. இரண்டுமே தமிழ்நாட்டை பீடித்த பீடைகள்.


Muralidharan S
செப் 08, 2024 10:15

அதிமுக ஒழிந்துவிட்ட கட்சி நல்ல விஷயம்தான் .. ஹிந்து மக்கள் ஒட்டு வங்கி என்று ஒன்று உருவானால் தமிழகத்திற்கு நல்லது . இல்லையேல் நிரந்தரமாக தீயமுக ஆட்சிதான். அடுத்தடுத்த தீயமுக ஆட்சியில் தமிழ்நாடு மேலும் மேலும் நாசமாகும், ஹிந்து ஆன்மிகம் மேலும் மேலும் அழிக்கப்பட்டு, அதர்மம் தழைத்து இப்பொழுதே விட இன்னும் கோரமாக தாண்டவமாடும்.


Murugesan
செப் 08, 2024 01:06

அதிமுகவை அழித்த நயவஞ்சக சுயநலவாதி ,திமுக காலை பிடித்து வாழுகின்ற கேவலமான ஆள் இவனுங்க


சமூக நல விரும்பி
செப் 07, 2024 21:16

பா. ஜ இனி அதிமுக உறவை விரும்பாது. ஏன் என்றால் அதிமுக விற்கு பா. ஜ வை பிடிக்காது.


m.n.balasubramani
செப் 07, 2024 20:06

தன்மானம் , மண்ணில் ஊர்ந்து போயி சசிகலா காலில் விழுந்தது . இந்த தொ வா கட்சியை முடுச்சு கட்டமா விடமாட்டார் . கட்சி உடையும்


K.Thangarajan
செப் 07, 2024 12:00

ஆட்சியில் இருக்கும் வரை பாஜக தேவைப்பட்டது, சட்டமன்றதேர்தலில் கௌரவமான தோல்வியில் துவண்டு அடுத்து எடுத்த முடிவால் பாராளுமன்ற தேர்தலில் தன்மானம் என்ன ஆனது?


K.Thangarajan
செப் 07, 2024 12:00

ஆட்சியில் இருக்கும் வரை பாஜக தேவைப்பட்டது, சட்டமன்றதேர்தலில் கௌரவமான தோல்வியில் துவண்டு அடுத்து எடுத்த முடிவால் பாராளுமன்ற தேர்தலில் தன்மானம்


K.Thangarajan
செப் 07, 2024 12:00

ஆட்சியில் இருக்கும் வரை பாஜக தேவைப்பட்டது, சட்டமன்றதேர்தலில் கௌரவமான தோல்வியில் துவண்டு அடுத்து எடுத்த முடிவால் பாராளுமன்ற தேர்தலில் தன்மானம் என்ன ஆனது?


K.Thangarajan
செப் 07, 2024 12:00

ஆட்சியில் இருக்கும் வரை பாஜக தேவைப்பட்டது, சட்டமன்றதேர்தலில் கௌரவமான தோல்வியில் துவண்டு அடுத்து எடுத்த முடிவால் பாராளுமன்ற தேர்தலில் தன்மானம் என்ன ஆனது?


K.Thangarajan
செப் 07, 2024 11:51

அந்த நபர் பேசிய கருத்துக்களில் என்ன குற்றம் கண்டீர் முன்னாள் முதல்வரே,இப்படி ஆன்மீகத்துக்கு எதிரானவர்களுக்கு ஒத்தூதுவதால் தான் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை