| ADDED : மே 30, 2024 08:58 PM
வரலாறு காணாத கோடை வெப்பம் காரணமாக, நகரின் சில பகுதிகளில் 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் டில்லியின் பங்கு ஹரியானாவால் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.வஜிராபாத் யமுனா நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தேன். இங்கிருந்து வசிராபாத், சந்திரவால், ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் செல்கிறது. யமுனை நதியின் நீர்மட்டம் 674 அடியாக இருக்க வேண்டும். ஆனால் 670.3 அடியாக மட்டுமே உள்ளது. இதனால், டில்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இன்று, நானும் தேசிய தலைநகரின் பங்கான தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன். டில்லிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பு. டில்லியின் தண்ணீரை நிறுத்த ஹரியானாவுக்கு எந்த உரிமையும் இல்லை.ஆதிஷி,மாநில அமைச்சர்'எக்ஸ்' பதிவு