உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி: பாசி, கண்ணாடி மணி கண்டெடுப்பு

கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி: பாசி, கண்ணாடி மணி கண்டெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையில் பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் நிலங்களில் ஜூன் 18ல் தொடங்கியது. கீழடியில் 12 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக இரு குழிகள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு அடி ஆழத்தில் இரு குழிகளிலும் பாசி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே வட்டப்பானை மூடியுடன் கூடிய பானைகள் கிடைத்த இடங்களின் வெகு அருகே 10ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்திருக்க வாய்ப்புள்ளன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:26

இதை தோண்டியெடுத்துப் பார்ப்பதற்காகவா மக்களின் வரிப்பணம்? ஆனால் எவ்வளவோ ஏழை மக்கள் சார்ந்த முக்கிய திட்டங்களுக்கு பணமேயில்லை என்று கைவிரிக்கிறீர்கள். தவறான முன்னுரிமைகள் மாநிலத்தை படுகுழியில் தள்ளிவிடும்


Svs Yaadum oore
ஜூன் 25, 2024 06:05

அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனவாம் .......இந்த பாசி மணி ஊசி மணி எல்லாம் மேய்ப்பர் காலத்தியது ....அவர் இங்கு வந்தபோது கீழே விழுந்தது .....அந்த கால கட்டத்திலேயே மேய்ப்பர் இங்கு வந்து சென்றார் ....அதனால் தமிழனுக்கு மதம் கிடையாது ....ஆனால் மேய்ப்பர் எல்லாம் தமிழர்கள் என்பது திராவிட பகுத்தறிவு ....மேய்ப்பர் இல்லையென்றால் தமிழனுக்கு அ ஆ இ ஈ கூட எழுத தெரியாமல் இருக்கும் ...இதை ராமசாமி அப்போதே மேய்ப்பரை சந்தித்து கூறியுள்ளார் ...


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 04:45

கிரேக்கத்துக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கப்பல் விட்ட நாகரீகம் வெறும் பாசி மணிகளை வைத்து காலத்தை ஓட்டியது என்று சொல்வது சுத்த பயித்தியக்காரத்தனம். இன்றுவரை பராமரிப்பு தேவையில்லாத கல்லணையும், பெரிய கோவிலும் அதற்க்கு சான்றாக நெடுங்காலம் நின்றிருக்கிறது. அவைகளை எப்படி கட்டினார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதையெல்லாம் ஆய்வு செய்யவேண்டும். இந்தோனேசியாவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய சிவாலயங்கள் கூட கண்டுபிடிக்கப்படுகிறது. அவையெல்லாம் நவீன மாயமான பிரிட்டிஷ் சரித்திரத்தில் அடக்கமில்லை. இந்திய நாகரீகம் லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையானது. அதை சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் அடக்க முயல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்வது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை