உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்கு குட்டு விழும்

மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்கு குட்டு விழும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: “மகாவிஷ்ணு வழக்கு, ஐகோர்ட்டுக்கு செல்லும்போது, தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம்,” என, தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நாராயணன் திருப்பதி நேற்று கூறியதாவது: சென்னை அரசு பள்ளியில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை தான் அழைப்பு விடுத்துள்ளது. அவரை வைத்து எழுந்திருக்கும் சர்ச்சை முழுதுக்கும் அமைச்சர் மகேஷ் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என, அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால், தவறுக்குப் பொறுப்பேற்று, அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.இதை விடுத்து, ஆசிரியர்களை மாற்றம் செய்து, மகாவிஷ்ணுவை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் துக்ளக் ஆட்சி நடத்துகின்றனர். எப்படியும் இந்த வழக்கு ஐகோர்ட்டுக்கு செல்லும். ஏற்கனவே பல வழக்குகளில், ஐகோர்ட்டில் தமிழக அரசு குட்டுப்பட்டிருக்கிறது. மகாவிஷ்ணு மீதான வழக்கிலும் தமிழக அரசு, மிகக் காட்டமான விமர்சனங்களை ஐகோர்ட் வாயிலாக எதிர்கொள்ளும்.அமைச்சர் மகேஷின் ஊரான, அன்பில் பகுதியில் பள்ளி முதல்வரின் மகன் ஒருவர், மருத்துவராக உள்ளார். இவர், அங்குள்ள பள்ளி குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை மறைக்கவே மகாவிஷ்ணு வழக்கைப் பரபரப்பாக்கி, அவரை பலிகடா ஆக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
செப் 09, 2024 17:03

உச்ச நீதிமன்றம் அங்கு உங்கள் மத்திய பாஜக அரசை தினமும் குட்டிக் கொண்டு இருக்கிறதே,அது போல தானே?


KEs
செப் 09, 2024 10:03

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. பரிமேலழகர் ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றார். எழுமை - மேலே கூறப்பட்டதுகுறள் 62. உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.


Shekar
செப் 09, 2024 09:31

குட்டா..... நாங்க தொடச்சிக்கிற ஆட்கள், குட்டெல்லாம் ஒரு பொருட்டல்ல


ஸ்ரீராம் 
செப் 09, 2024 08:50

கொஞ்ச காலம் அன்பு உமாசங்கர் ஐ ஏ எஸ் ஒரு பள்ளியில் கிறித்துவ மதப்பிரச்சாரம் ஆற்றி மாணவர்களே அவரைக் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள விருப்பம்.


kantharvan
செப் 09, 2024 08:42

குட்டினா குனிய கூன் பாண்டிகள் அல்ல..


SIVA
செப் 09, 2024 16:06

இரு நூறு ரூபாய் கொடுத்தால் எத்தனை புனை பெயரில் வேண்டும் என்றாலும் ஜால்ரா அடிப்பவர்களுக்கு கோர்ட் கண்டம் செய்வதன் அர்த்தம் தெரியாது, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு பத்து லட்சம், சுவர் இடிந்து பிள்ளை இறந்து விட்டது அதற்கு ஐந்து லட்சம் கொடுக்க பணம் இல்லை , என்று கோர்ட் அரசுக்கு அபராதம் விதித்தது ...


Barakat Ali
செப் 09, 2024 08:41

குட்டு விழாது ..... கோர்ட்டு திமுகவின் பாக்கெட்டில் இருக்கு ......


சாண்டில்யன்
அக் 25, 2024 22:57

பிஜேபி பாக்கெட்டில் விழுந்தா ராஜ்யசபா பதவி என்ன ஆளுநர் பதவிகூட கிடைத்துள்ளது. இங்கே?


VENKATASUBRAMANIAN
செப் 09, 2024 08:23

அதெல்லாம் சரிதான். நீதிமன்றம் ஏன் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வில்லை. ஒரு தடவை கொடுத்தால்தான் புத்தி வரும்.


Appan
செப் 09, 2024 08:23

தமிழகம் சைவ சித்தாந்த மண் .இங்கு போன பிறப்பு மறு பிறப்பு போன்ற சாணதனத்தை போற்றும் மண் அல்ல ..


N.Chinnachamy
செப் 09, 2024 08:21

முதல் குட்டு தான் முக்கியம்


RAJ
செப் 09, 2024 08:03

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன்ல தினமும் மதமாற்றம் நடைபெறுகிறது. அங்குள்ள விடுதி மாணாக்கர்கள் கட்டாயமாக சர்ச்சுக்கு அழைத்து செல்லப்படுகிறர்கள்.. ஒரு நியூஸியும் காணோமே..


புதிய வீடியோ