உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதி நிலையில் பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை

காலாவதி நிலையில் பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை

சென்னை:காலாவதியாகும் நிலையில் உள்ள பால் பொருட்கள், ஆவின் பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.ஆவின் வாயிலாக பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், வெண்ணெய், நெய், பால் பவுடர் உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு உள்ளது. ஆனால், வெண்ணெய், பால் பவுடர் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. நெய் மட்டுமே அவ்வப்போது விற்பனைக்கு வருகிறது.தயிர், லஸ்ஸி, மோர், பால்கோவா, மைசூர்பாகு, மிக்சர், பட்டர் முறுக்கு உள்ளிட்டவை தயாரிப்பில், ஆவின் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கோடையில் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கோடை மழை காரணமாக, குளிர்ந்த சூழல் நிலவுவதால், பல மாவட்டங்களில் குளிர்ச்சியான ஆவின் பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. அவை, தேக்கம் அடைவதால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆவின் உற்பத்தி பிரிவு மற்றும் விற்பனை பிரிவிற்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், விற்பனை குறைந்த பொருட்களை அதிகம் தயாரித்து ஸ்டாக் வைக்கப்பட்டு வருகிறது. இவை, காலாவதி தேதியை நெருங்கும் போது, வேறு வழியின்றி பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுகின்றன. இதனால், பாலகங்களை நடத்துவோர் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

'நிர்பந்தம் செய்கின்றனர்'

பால் ஏஜென்ட்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் சப்ளை செய்வதில்லை. குறைவாக விற்பனையாகும் தயிர், நுாடுல்ஸ், முறுக்கு, மிக்சர் மற்றும் இனிப்பு சப்ளை செய்யப்படுகிறது. காலாவதி நெருங்கும் நேரத்தில் அவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இப்பொருட்களை மாதத்திற்கு, 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என, ஆவின் மண்டல மேலாளர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். பொருட்களை வாங்காதவர்களுக்கு பால் சப்ளை முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படுகிறது. முறையான திட்டமிடல் இல்லாததால் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல, பாலகங்கள் நடத்துபவர்களும் நஷ்டம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ