உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிப்பெண் சமப்படுத்தல் முறை நெட், கியூட் தேர்வில் ரத்து

மதிப்பெண் சமப்படுத்தல் முறை நெட், கியூட் தேர்வில் ரத்து

சென்னை: மத்திய பல்கலைகளின் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான கியூட் நுழைவு தேர்வு மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதி தேர்வு ஆகியவை தேசிய அளவில் நடத்தப்படுகின்றன.பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் சார்பில், பல கட்டங்களாக இந்த தேர்வு நடக்கும். இதில், ஒரே பாடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்களில், மாநில வாரியாக பிரித்து தேர்வு நடக்கும். அதனால், ஒரே பாடத்துக்கு பல வகை வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும்.இதில், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்கள் இடம் பெறுவதால், அனைத்து தேர்வர்களுக்கும் சமமான தகுதியை நிர்ணயிக்க, 'நார்மலைசேஷன்' என்ற மதிப்பெண் சமப்படுத்தல் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான கியூட் மற்றும் நெட் தேர்வுகள், ஒவ்வொரு பாடத்துக்கும் மாநில அளவில், ஒரே நாளில் ஒரே வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதனால், வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வில், மதிப்பெண் சமப்படுத்தல் முறை கைவிடப்படுவதாக யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை