உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் வயிற்றில் தியானம்: முத்துமலை கோவிலில் பழனிசாமி

முருகன் வயிற்றில் தியானம்: முத்துமலை கோவிலில் பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்துார்: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டி, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சிறப்பு வழிபாடு செய்தார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, ஏத்தாப்பூர் பகுதியில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 146 அடி உயரத்தில் முருகன் மற்றும் 108 அடி உயரத்தில் வேல் சிலை உள்ளது.இக்கோவிலுக்கு நேற்று காலை வந்தார் பழனிசாமி.தங்க கவச அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த, மூலவர் முத்துமலை முருகனை வழிபாடு செய்து, கருவறையில் வைத்துள்ள வேலை தன் கையில் வாங்கி கருவறையைச் சுற்றி வந்தார்.தொடர்ந்து, 146 அடி உயர முருகன் கையில், 108 அடி உயரத்தில் உள்ள வேலுக்கு, அபிஷேகம் செய்து வழிபட்டார். பின், முருகன் சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து வெகுநேரம் தியானம் செய்தார். தொடர்ந்து கோவில் மற்றும் அன்னதான மண்டபத்தில், பக்தர்களுக்கு அ.தி.மு.க., சார்பில், அன்னதானம் வழங்கினார்.

அர்ச்சகர்களிடம் விசாரிப்பு

'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கோவில் அர்ச்சகர்களிடம் பேசினார் பழனிசாமி.அப்போது, ''தினமலர்' நாளிதழில், 'டீ கடை பெஞ்ச்' பகுதியில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக, 'குங்கும அர்ச்சனை' நடப்பதாக செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியை, சென்னையில் படித்தேன். அது சரியா?'' என, பழனிசாமி அர்ச்சகர்களிடம் கேட்டார்.அதற்கு அர்ச்சகர்கள், 'கடந்த, இரண்டு ஆண்டுகளாக, மீண்டும் முதல்வராக வரவேண்டியும், அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்காகவும், குங்கும அர்ச்சனை நடக்கிறது' என்றனர்.'அப்படியென்றால், தொடர்ந்து குங்கும அர்ச்சனை செய்யுங்கள்' என, அர்ச்சகர்களிடம் கூறிய பழனிசாமி, அங்கிருந்து புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kumar Kumzi
ஜூன் 04, 2024 09:05

தேர்தல் பிரச்சார நேரத்தில் நெற்றியில் விபூதியை அழித்துவிட்டு சிறுபான்மையினரின் ஒட்டு பிச்சைக்காக நாடகமாடிய எட்டப்பன் நீ இப்போ இந்து கடவுள்கள் கேக்குதோ


Kavi
ஜூன் 04, 2024 07:59

eliminate from politics


ஆசாமி
ஜூன் 04, 2024 07:39

கதை குளோஸ்.


R.RAMACHANDRAN
ஜூன் 04, 2024 07:38

ஒவ்வொருவருக்கும் இந்த பிறவியில் என்னென்ன அனுபவிக்க வேண்டும் என தலையெழுத்து எழுதி அனுப்பப்பட்டுள்ளது.அதனை சுய நலத்திற்காக மாற்ற முடியாது.


கடுகு
ஜூன் 04, 2024 07:13

நீ பெரும்பான்மையினருக்கு எதிரா அடிச்ச கூத்துக்கு முருகன் வேலால குத்தாம உட்டாரேன்னு சந்தோசப்படணும்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூன் 04, 2024 07:08

அப்படியே குல்லா போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்கு போய் அல்லாவை துவா செய்தும் சர்ச்சுக்கு போய் மண்டியிட்டு கர்த்தரை ஜெபித்தும் வந்தால் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் மதச்சார்பற்ற தலைவர் எங்கள் எடப்பாடி பழனிச்சாமி என்று தன் அல்லக்கைகளை கூவச் சொல்லி தன்னை உண்மையான புரட்சித் தமிழர் என்று நிரூபித்து விடலாம்!


sridhar
ஜூன் 04, 2024 06:55

முருகா , சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நல்ல buddhi கொடு … பிஜேபி + admk தான் திமுகவை வெல்லும்.


chandrakumar
ஜூன் 04, 2024 06:32

நீங்கதான் திராவிடர்கள் ஆச்சே அப்புறம் எதற்க்கு தியானம் அர்ச்சனை வேண்டுதல் இவையெல்லாம் உங்கள் அடிப்படை சாசனத்திற்க்கு விரோதமானதாயிற்றே


subramanian
ஜூன் 04, 2024 06:31

எந்த விதத்திலும் தகுதியில்லாதவர்


மோகனசுந்தரம்
ஜூன் 04, 2024 06:03

அய்யய்யோ பழனியாண்டியாரே சிறுபான்மையினர் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் ஜாக்கிரதை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை