உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி எஸ்கேப்

ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி எஸ்கேப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடந்த கம்பன் கழக விழாவில், ராமர் ஆட்சி பற்றி சட்டத்துறை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்காமல் சென்று விட்டார்.புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற கம்பன் திருவிழா நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சிதான் என்று கூறியதோடு ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்,'' என்று கூறிச் சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yj2k3gs2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் 'இதை புரிந்து கொள்வதற்கு தி.மு.க.,வுக்கு இவ்வளவு காலம் ஆகி உள்ளது. இவ்வளவு காலமாக ராமராஜ்யம் குறித்து, தி.மு.க.,வினர் கூறிய கருத்துக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர், ராமராஜ்யம் குறித்து விளக்கம் அளித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்' என்று கூறினார்.அதேபோல் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் 'தமிழகத்தில் நடைபெற்று வருவது ராமராஜ்யம் அல்ல; ராவண ராஜ்யம். ராமரை எதிர்த்தவர்கள் அதை மறைத்து பேசத் துவங்கி உள்ளனர்' என்று கூறினார். இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தார் அமைச்சர் ரகுபதி. நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சரிடம் 'நீங்கள் ராமர் ஆட்சியின் நீட்சிதான் திராவிட மாடல் ஆட்சி, என்று நேற்று முன்தினம் கூறிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறதே' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ''அதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை,'' என்று கோபமாகக் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

subramanian
ஜூலை 24, 2024 22:06

ராமரின் தண்டம் தானே வந்து ஒரு போடு போடும்.


venugopal s
ஜூலை 24, 2024 13:54

ராமர் பற்றி திமுகவினர் எப்படி பேசலாம்? ராமர் பாஜகவினரின் தனிப்பட்ட சொத்து, வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை!


hari
ஜூலை 24, 2024 18:31

இதுல பாருங்க, நம்ம வேணுவுக்கே கோவம் வந்துடிச்சி


subramanian
ஜூலை 24, 2024 22:04

வேணு, ராமர் இன்ஜினியரிங் படித்தவரா? என்று கேள்வி எழுப்பினார் கருணாநிதி. ராமர் ஒரு ராஜா, ராமர் அறுபத்து நான்கு கலைகளும் கற்றவர். அதில் இன்ஜினியரிங்கும் அடக்கம். இது உனக்கு புரியவில்லை என்றால் போய் சுவரில் முட்டிக் கொண்டு கதற வேண்டும்.


Barakat Ali
ஜூலை 24, 2024 13:33

இராவணன் பிராம்மணன் .... ராமன் சத்திரியன் ....


Sampath Kumar
ஜூலை 24, 2024 11:45

ரோம்ப அசிங்கம் ராமர் ஆரியர் இல்லை அவரு திராவிடர் இராவணன் தான் ஆரியர் கதையை மாத்திட்டானுக போல


sridhar
ஜூலை 24, 2024 11:02

மேடைக்கு ஏற்ப பேச்சு, திக திமுக மேடையில் ஹிந்து விரோத பகுத்தறிவு பேசுவார், மக்கள் ஏமாளிகள் தானே


Apposthalan samlin
ஜூலை 24, 2024 10:41

ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாள் என்ன இந்த பாட்டு தான் நினைவில் வருகிறது.


hari
ஜூலை 24, 2024 18:33

நமக்கு 200 ரூபாய் வந்தா போதும்... அப்போஸ்தலர் மைண்ட்வொய்ஸ்


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 10:34

ராமர் சொன்ன சொல் மீறாத அவதாரம். ரூபாய்க்கு மூணு படி, முதல் கையெழுத்து, குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் போன்ற போலி வாக்குறுதிகளைக் கொடுக்காமல் ஆட்சி செய்தவர்.


Sivaswamy Somasundaram
ஜூலை 24, 2024 10:05

ரகுபதி ராகவ ராஜா ராம்?


S. Narayanan
ஜூலை 24, 2024 09:53

ராமர் பற்றி பேச இந்த ஆளுக்கு எந்த தகுதியும் கிடையாது


Ramesh Sargam
ஜூலை 24, 2024 09:50

ரகுபதி தன்னை மறந்து ஒரு உண்மையை பேசிவிட்டார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை