மேலும் செய்திகள்
பாவேந்தர் பேரவை பாராட்டு விழா
14-Aug-2024
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பழையகோட்டையை சேர்ந்தவர் மதிவாணன், 28; ஐ.டி., ஊழியர். இவரது மனைவி ராகவர்த்தினி, 26. மதிவாணனின் தாய் பாக்கியலட்சுமி, 55, மகன் ஆதித், 1 ஆகியோருடன், காரில் தாராபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு, மகன் பிறந்த நாளையொட்டி சென்று விட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.காங்கேயம் - தாராபுரம் ரோட்டில் ஊதியூர், குட்டைக்காட்டு அருகே சென்ற போது, ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் கார் மோதியதில், ராகவர்த்தினி, பாக்கியலட்சுமி இறந்தனர். குழந்தையும், மதிவாணனும் கோவையில் சிகிச்சை பெறுகின்றனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Aug-2024