உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: ஐகோர்ட்

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 'யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக்கூடாது' என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கமளித்த நிலையில், 'எப்.ஐ.ஏ' அனுமதியளிக்கும் பட்சத்தில் கார் பந்தயம் நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவி்ட்டது.தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டது.

விசாரணை

இந்நிலையில் கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர், 'சென்னையில் பார்முலா - 4 கார் பந்தயம், வரும் 31, 1 ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்தப் பந்தயத்துக்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது'' என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வாதம்

'ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு போக்குவரத்து மாற்றம் உறுதி செய்யப்படும்' என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உத்தரவு

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், '' பொதுமக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது. பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து சீராக இருக்க வேண்டும். மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. கார் பந்தயம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.

தடையில்லை

மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'எப்.ஐ.ஏ' அனுமதியளிக்கும் பட்சத்தில் கார் பந்தயம் நடத்த தடையில்லை என உத்தரவி்ட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Kasimani Baskaran
ஆக 30, 2024 05:31

கார் பந்தயத்தால் மாநில அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாரும் சிரிக்கக்கூடாது...


Sathishkumar.N
செப் 02, 2024 08:35

அதான, மோடி விளம்பரத்துல நடிச்சு அதானி அம்பானி போட்டி நடத்துனா மட்டும் தான் நாடு செழிப்பா இருக்கும்...


rama adhavan
ஆக 30, 2024 04:28

அன்று அடை மழை வர வேணும் பகவானே ??.


Krishna
ஆக 30, 2024 03:05

தமிழ் நாட்டிலிருந்து ஒலிம்பிச்சில் ஒரு வெண்கல பதக்கம் கூட இல்லை. மாநிலத்தோல் விளையாட்டு பயிர்ட்ட்சி க்கான அடிப்படை வசதி சையவேண்டாமா. அதுமுக்கியம்மில்லையா. ஹரியானா செண்று அங்குள்ள வசதிஐ பாருங்கள். வாடா மாநிலங்களில் வசதி பெரிதாகிறது. இதுவல்லோ முக்கியம் ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கு.


Raj S
ஆக 29, 2024 23:58

அது எப்படி? பொது மக்களுக்கு இடையூறு இருந்ததா?இல்லையா? என்று கண்டு புடிப்பார்கள்? இந்த மாதிரி அரை வேக்காடு இருந்தால் நாடு இதைவிட மோசமான நிலைக்கு தான் போகும்...


Iniyan
ஆக 29, 2024 22:56

இவ்வளவு பெட்டி கை மாறியதோ


Ramesh Sargam
ஆக 29, 2024 22:29

கார் பந்தயம் நடத்தும் அளவுக்கு நமது மாநகர வீதிகள் குண்டும், குழியும் இல்லாமல் இருக்கிறதா...? யாருக்கும் இடையூறு கூடாது. அது இருக்கட்டும். பந்தயத்தில் பங்கேற்கும் கார்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் நமது மாநகர வீதிகளில் எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.


xyzabc
ஆக 29, 2024 22:23

அவசியமான போட்டி. வேணுகோபால் கை தட்டட்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 29, 2024 20:28

உயர்நீதிமன்றம் திமுகவின் கிளை இயக்கம் ...... இதைத்தான் எதிர்பார்த்தோம் .....


Sree
ஆக 29, 2024 19:45

இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா போய் எழுதனும்


Mani . V
ஆக 29, 2024 19:23

மக்கள் சோத்துக்கு வழி இல்லாமல் இருந்தாலும், கௌரவத்துக்காகா நாம இது போன்றவைகளை நடத்தித்தானே ஆவணும்.


Sathishkumar.N
செப் 02, 2024 08:37

வெளி நாட்டு தலைவர்கள் வந்தா ஊரை திரை போட்டு மறைக்கும் கையாலாகாத அரசை விட இது ஒன்னும் கேவலம் இல்ல