உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்குமே பாதுகாப்பில்லை; எல்லாரும் துணிஞ்சுட்டாங்க; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு!

எங்குமே பாதுகாப்பில்லை; எல்லாரும் துணிஞ்சுட்டாங்க; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ?' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது.

நிர்வாக சீர்கெடு

இதே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் கடந்த மாதம் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் 6 பேர் கொண்ட மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டார். புகார் அளிக்க சென்றால், போலீசார் தன்னை அலைக்கழித்ததாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

தண்டனை

சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது என்று குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ என்று நினைக்கும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இனி ஒரு நிர்பயா தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க., அரசத வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mr Krish Tamilnadu
செப் 06, 2024 21:09

போதை பொருள் புழக்கம், திட்டம் இட்டு நினைத்தப்படி படுகொலை, கள்ளச்சாராயம், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு முன் நடந்த ஆட்சி மாதிரி, இதனால தான் இவர்களுக்கு ரொம்ப நாளா ஓட்டே போடால மக்கள். நீங்க கட்சிய பிடிக்கிறேன்னு, காலாவதி ஆயிட்டிங்களே. காகா கத்துவதும், எதிர் கட்சி தலைவர் கத்துவதும் தினசரி கத்தல் அப்படியினு மக்கள் சும்மா தான் இருப்பாங்க. ஒரு போராட்டம், உண்ணாவிரதம். மக்கள் தந்த செல்வாக்கு, மக்களுக்கு பயன்பட வேண்டுமிலா.


Rajah
செப் 06, 2024 18:14

உண்மைதான். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியும்? முதலில் அண்ணா முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்றுங்கள். உங்களை பிடித்த தரித்திரம் போய்விடும்.


Ms Mahadevan Mahadevan
செப் 06, 2024 14:01

முன்விரோதம் காரணமாக, தனி மனித ஒழுக்கம் இன்மை போன்ற காரணங்களால் ஏற்படும் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பாகும் உங்கள் ஆட்சியிலும் இவ்விதமான குற்றங்கள் நடந்தது உண்டு. எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையும் பேச கூடாது.


Lion Drsekar
செப் 06, 2024 13:24

மின்சார கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூல், வியாபாரம் இல்லையென்றாலும் கட்டாய வரி, குடிநீர் வரவில்லை என்றாலும் வரி, வாகனம் வாங்கும்போது ரோடு வரி மொத்தமாக வாங்கிய பிறகும், ஒவ்வொரு இடங்களிலும் கட்டாய வசூல், தேவையே இல்லாமல் இருப்பவர்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு ஊரையும் விரிவாக்கம் செய்து, அதற்க்கு அதிகாரிகள், ஊழியர்கள் , ஆண்டுதோறும் ரோடு போடுதல், குளங்கள் ஏரிகளில் வளர்க்கப்படும் வளரும் செடிகொடிகளை அகற்ற என்று கணக்கிட்டால் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் வீணாகிறதே அதை நீங்கள் கேட்காமல் சாமானிய மக்கள் கேட்க முடியுமா ? வந்தே மாதரம்


சமூக நல விரும்பி
செப் 06, 2024 13:18

இனி திமுக திருந்த வாய்ப்பு இல்லை. மக்கள் நல்ல ஆட்சி அமைக்க காத்து இருக்கிறார்கள்.


karupanasamy
செப் 06, 2024 13:15

திமுக காரன் செய்தால் போலீசு விளக்கு புடிக்கணும்னு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருக்கிறார்.


karupanasamy
செப் 06, 2024 13:15

திமுக காரன் செய்தால் போலீசு விளக்கு புடிக்கணும்னு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருக்கிறார்.


RAMAKRISHNAN NATESAN
செப் 06, 2024 13:08

உங்கள் ஆட்சியில் திருச்சியில் நடந்த ஒரு கட்சி மாநாட்டுக்கு தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் .... அப்போது பெண்மணி ஒருவரின் முதுகில் அதிமுக தொண்டர் தட்டியதை பார்க்க நேர்ந்தது .....


Kadaparai Mani
செப் 06, 2024 16:48

எடப்பாடி ஆட்சி இல் திருச்சி மாநகரில் அதிமுக மாநாடு நடக்கவில்லையே . எந்த வருடம் விளக்கம் கொடுக்க வேண்டும்


S Regurathi Pandian
செப் 06, 2024 12:27

குற்றத்தை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டிப்பது சரிதான். ஆனால் இவரது ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இவர் செய்தார், என்ன பேசினார்? அதையும் சேர்த்து மக்கள் பார்க்க வேண்டும்? பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசுவார்கள் ஆளும்கட்சியாக இருந்தால் எதிர்மாறாக வேறு ஒன்றை செய்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை