உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ்கள் கூட வாங்கவில்லை: இதுல விமான நிலையமா?: அண்ணாமலை கேள்வி

பஸ்கள் கூட வாங்கவில்லை: இதுல விமான நிலையமா?: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரண்டு ஆண்டுகளில், பஸ்கள் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திமுக எம்.பி., வில்சன் ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெளிவாகப் பதிலளித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7x6mpzt4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு டி.ஏ.ஏ.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பஸ்கள், 500 மின்சாரப் பஸ்கள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பஸ்களைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை.கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 28, 2024 13:58

கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பன்னாட்டு விமான நிலையமாக உலகின் லண்டன் நியூயார்க் பாரீஸ் போன்ற நகரங்கள் உட்பட 50 மேற்பட்ட உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. உலகிலேயே அதிக சிறந்த பன்னாட்டு விமான நிறுவனங்களில் முதல் பத்து விமான நிலையங்களில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று. வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். நாளை நமதே.


GMM
ஜூன் 27, 2024 17:25

முதலில் மாநிலம் கடன் வாங்குவது கட்டுப்படுத்த வேண்டும். கடனை அடைக்க கட்டாய படுத்த வேண்டும். வட்டியை நீண்டகாலம் கட்டிக்கொண்டு இருக்க முடியாது. உலக பொருளாதார நிலை மாறும் போது, கடனை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் வரும். விமான நிலையம் என்ன சைக்கிள் ஸ்டாண்டா? பெங்களூர், சேலத்தில் உள்ளது போதாதா? ஓசூர் பூ வியாபாரம் தான் பிரபல்யம். பூ வாங்க வெளிநாட்டில் இருந்து வரும் பழக்கம் உண்டா? திராவிட கூட்டம் திருந்தாது.


என்றும் இந்தியன்
ஜூன் 27, 2024 16:45

ஸ்டாலின் உளறுவதில் என்ன தவறு. அதைபோலத்தான் இதுவும்???ஒரு பணி கூட இந்நாள் வரை சரியாகச்செய்யாமல் ஆய்வு என்று சொல்லி அங்கு போய் வெறுமனே வாய்வு விட்டு வருதல் செய்யும் இந்த திருட்டு திராவிடம் பின் என்ன செய்யும்??


ES
ஜூன் 27, 2024 16:09

New topic to divert the alcohol issue. we need to suffer two more years of this


hari
ஜூன் 27, 2024 15:57

ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் இந்த 200 ரூபாய் கொத்தடிமைகளை திருத்தமுடியாது


அப்புசாமி
ஜூன் 27, 2024 15:47

எத்தனை பஸ்கள் வாங்கினதுக்கப்புறம் புது விமான நிலையங்கள் தொறந்தீங்க கோபால்?


hari
ஜூன் 27, 2024 15:58

ரொம்ப மட்டமான கமெண்ட் அப்புசாமி.....சகிக்கல.... ஒரு நாளாவது உருப்படியான கமெண்ட் போடுங்க கோவாலு.....


Baalu
ஜூன் 28, 2024 07:36

Good Appusamy


Ms Mahadevan Mahadevan
ஜூன் 27, 2024 15:47

சும்மா பேசுவதை கேட்டு ரசிக்க நாங்கள் என்ன முட்டாளா?


Palanisamy Sekar
ஜூன் 27, 2024 15:37

அம்மா ஜெ அவர்கள் ஆட்சியில் 110 விதியின் கீழ் பேசும்போதெல்லாம் இதே ஸ்டாலின் எவ்வளவு கேலி கிண்டல் செய்தார் தெரியுமா? காவிரி நீர் கேட்டு கோர்ட்டுக்கு போனால். ஓஹோ இப்படி அண்டை மாநிலங்களோடு சண்டைபோட்டு கோர்ட்டுக்கு போனால் எப்படி உறவு சுமுகமாக இருக்கும் என்றெல்லாம் கேட்டார் இதே ஸ்டாலின். இப்போ அதே சட்டமன்றத்தில் அதே ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசுவது நல்ல கோமாளித்தனமாக தெரிகின்றது. மேற்கூரை இல்லாத பஸ் ஏற இறங்க படிகள் இல்லாத பஸ் .. நிறுத்தங்களில் நிற்காத பஸ் , பெண்களை அலையவிட்டு அமைச்சரே கேலி செய்கின்ற அவலங்கள்.. இது ஆட்சியே இல்லை..அலங்கோல ஆட்சி.. இன்னும் இருக்கின்ற இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு பேர் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட போகின்றார்களோ தெரியல. அண்ணாமலை அவர்கள் திமுக பைல்ஸ் விவரங்களை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கணும். டூ ஜி வழக்கின் போக்கு பற்றியெல்லாம் அப்டேட் செய்து பேசினால் பல இளைஞர்களுக்கு நல்ல சந்தோஷமான செய்தியாக இருக்கும். பொன்முடி வழக்கும் அவரது ஜாமீன் பற்றிய செய்தியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கணும். பொன்முடி எப்போ ஜெயிலுக்கு போவார் என்றெல்லாம் சொல்லணும். இல்லை என்றால் போராடிக்கிறார் என்று அண்ணாமலை பேட்டியை கண்டுகொள்ளாமல் போவார்கள். இன்றய திமுகவின் ஊழல்கள் தொடர்ந்து சொன்னால்தான் மக்கள் மனதில் எப்போதுமே பச் என்று திமுக மீதான எதிர்ப்பு நிலை தொடர்ந்துகொண்டே வளரும். இது அண்ணாமலை அவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.


vijay, covai,
ஜூன் 27, 2024 15:28

40/40 கு காரணம் தீய முக இலவச பஸ், மாதம் 1000 எல்லாம் நிறுத்தி விடுவார்கள் என்று வாய் வழி புரளி எல்லா இடங்களிலும் பரப்பியதே


Senthilraj
ஜூன் 27, 2024 18:55

அப்போ இப்படியெல்லாம் புரளி கிளப்பி தான் பிஜேபி கூட மற்ற மாநிலங்களில் வெற்றிபெறுகின்றதா??


venugopal s
ஜூன் 27, 2024 14:58

விமான நிலையங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை அல்ல என்பது தமிழக முதல்வருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்கும் நன்றாகவே தெரியும், அப்புறம் எதற்கு இந்த கண்ணாமூச்சி விளையாட்டு? தமிழக அரசு மத்திய அரசுக்கு ஹோசூரில் விமான நிலையம் அமைக்க பரிந்துரைக்கலாம், வேறு என்ன செய்ய முடியும்?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 15:40

பூர்வாங்க வேலையான நிலமெடுப்பு போன்ற ஏற்பாடுகளை மாநில அரசுதான் செய்ய வேண்டும். இன்னொரு விஷயம். பெங்களூரு கேம்பகவுடா (தனியார்- அரசு கூட்டுறவு)விமான நிலையத்திலிருந்து 150 கிமி தூரத்துக்குள் வேறு விமான நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் இடமளிக்கவில்லை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி