மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
08-Aug-2024
சென்னை: 'டிஜிட்டல்' பயிர் சர்வே பணியை புறக்கணித்த நிலையில், தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.கூட்டமைப்பு சார்பில், வருவாய் நிர்வாக ஆணையரிடம் அளித்து உள்ள மனு:டிஜிட்டல் பயிர் சர்வே தொடர்பாக, ஜனவரி 8ல் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் துறை செயலர் ஆகியோருடன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அப்போது, டிஜிட்டல் பயிர் சர்வே பணிக்கு, தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஒரு பதிவுக்கு 10 ரூபாய் மதிப்பூதியம் வழங்க, அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.டிஜிட்டல் பயிர் சர்வேக்கான மொபைல் போன் செயலியில் உள்ள குறைகளை களைய, பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒத்திகை நிலையிலேயே செயலியை வைத்திருப்பது, இத்திட்டத்தை நீர்த்து போகச் செய்யும்.தொழில்நுட்ப உபகரணங்கள், மதிப்பூதியம் இல்லாமல் பணி செய்ய சொல்வது, மேலும் பணிச்சுமையை ஏற்றுவதாகும். இதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணியை புறக்கணித்துள்ளோம்.அரசின் கவனத்தை ஈர்க்க, வரும் 9ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ச்சியாக, 17ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலங்கள் முன்னரும்; 30ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்னும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
08-Aug-2024