மேலும் செய்திகள்
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
45 minutes ago
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
1 hour(s) ago
சென்னை:பிரபல பட்டப்படிப்புகள் பெயரில், 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகளை நடத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:சில தனி நபர்கள் மற்றும் நிறுவனத்தினர், ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகின்றனர்.இவர்கள் தங்களது படிப்புகளின் பெயரை, பிரபலமான பட்டப் படிப்புகளின் சுருக்க எழுத்துகளை போன்று அமைத்து, மாணவர்களை கவர்ந்திழுக்கின்றனர். இந்த வகையில், ஒரு நிறுவனம் 10 நாளில் எம்.பி.ஏ., என்ற பெயரில், ஒரு ஆன்லைன் படிப்பை அறிவித்திருப்பது, யு.ஜி.சி.,யின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.ஒவ்வொரு பட்டப் படிப்புக்கும் பாடத்திட்டம், படிப்பு காலம், படிப்பதற்கான தகுதி, தேர்வு முறை, சான்றிதழ்களுக்கான மதிப்பு, மத்திய, மாநில அரசுகளின் அங்கீகார நிலை என, பல்வேறு அம்சங்கள் உள்ளன.முறையாக அங்கீகாரம் பெற்று, விதிகளின்படி செயல்படும் மத்திய, மாநில, நிகர்நிலை பல்கலைகள் மற்றும் பார்லிமென்டால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட தனித்துவ நிறுவனங்கள் மட்டுமே, இந்த பட்டப் படிப்புகளை நடத்த முடியும்.மேலும், யு.ஜி.சி., போன்ற அமைப்புகளில் படிப்பு நடத்தும் அங்கீகாரம், அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட படிப்பு விபரத்தை, deb.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.எனவே, மாணவர்கள் மற்றும் படிப்புகளை மேற்கொள்வோர், மேற்கண்ட அனுமதிக்கப்பட்ட பட்டப் படிப்புகள் தவிர, அதே பெயரில் உள்ள வேறு ஆன்லைன் படிப்புகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
45 minutes ago
1 hour(s) ago