உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமாயில் தட்டுப்பாடு கார்டுதாரர்கள் ஏமாற்றம்

பாமாயில் தட்டுப்பாடு கார்டுதாரர்கள் ஏமாற்றம்

சென்னை : தமிழக ரேஷன் கடை களில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி கார்டுதாரர்களுக்கு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க மாதம், 2 கோடி லிட்டர் பாமாயில் தேவை. இதை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. அதன்படி, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்குவதற்கு, கடந்த மாதம் 'டெண்டர்' கோரப்பட்டது. இன்னும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளுக்கு இம்மாதத்திற்கான பாமாயில் முழுவதுமாக அனுப்பப்படவில்லை. எனவே, கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், கார்டுதாரர்கள் பாமாயில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ