உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்

வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை, முன்னுக்குப் பின் முரணாக மாற்றிக்கூறி, தி.மு.க., அரசு மக்கள் மத்தியில் பிரிவினையை துாண்டி வருகிறது. ஹிந்தி திணிப்பு என்ற தங்களின் கூட்டு நாடகம் பெரும் தோல்வி அடைந்து விட்டதன் விளைவாக, அனைத்து அறிவாலய தலைவர்களும், உச்சக்கட்ட பதற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.அதனால்தான், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை திரித்து, கட்டுக்கதை கட்டி மக்களை திசை திருப்பி, தங்கள் அரியணையை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படுகின்றனர். அதிலும் குறிப்பாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக, தி.மு.க., அரசு கடிதம் எழுதியதை, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி விட்டார் என்ற அச்சத்தில் தான், மத்திய அமைச்சர் குறித்த பொய்யான வதந்தியை பரப்ப, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று உடனுக்குடன் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க., அரசு என்னதான் தகிடுதத்தம் செய்தாலும், அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
மார் 11, 2025 18:29

வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் சகித்துக் கொள்ளாததால் தான் பாஜகவை ஓரங்கட்டி வைத்து உள்ளனர்!


अप्पावी
மார் 11, 2025 15:54

ஆயிரம் முறை இந்தி மேல் வெறுப்பு இல்லை. இந்தித் திணிப்பு மேலதான் வெறுப்புன்னு சொன்னா இவிங்களுக்கு புரியாது. மும்மொழிக் கொள்கை அமலில் இருக்கும் கர்னாடகாவில், பெங்களூரில் தமிழ் மொழி சொல்லிக்குடுக்க ரெண்டு பள்ளிகள்தான் இருக்கு. ஆனா எல்லா பள்ளிகளிலும் இந்தி சொல்லிக் குடுக்கறாங்க. எங்கள் வீட்டுப்.புள்ளைங்க தமிழை விட்டுட்டு கன்னடத்தில் படிச்சு இப்போ தமிழே தகராறுன்னு ஆயிடிச்சு. பெங்களூரிலும் மும்பைல மராத்தி செத்துப் போன மாதிரி கன்னடா செத்துப் போச்சு. இதே மாதிரி நிலைமை தமிழுக்கும் வந்து விடக் கூடாது.


xyzabc
மார் 11, 2025 12:47

ரூ 200க்கு சகிப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை