உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

சென்னை: ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிகள் வழங்கப்படும் என அறிவித்ததற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சிகளில், 1.40 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், 22,000க்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் கவுன்சிலர்களும், ஊரக உள்ளாட்சிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர், மக்களால் ஓட்டளிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வாகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக, ஊரக உள்ளாட்சிகள் சட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசனை குழு உறுப்பினரும், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'டிசம்பர் 3' இயக்கத்தின் மாநில தலைவருமான பேராசிரியர் தீபக் நாதன், பொதுச்செயலர் அண்ணாமலை, பொருளாளர் வரதன் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். உள்ளாட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற, அறிவிப்பு வெளியிட்டதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை