உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து கோவில்களில் உள்ள சாய்பாபா சிலை அகற்ற மனு

ஹிந்து கோவில்களில் உள்ள சாய்பாபா சிலை அகற்ற மனு

சென்னை : ஹிந்து கோவில்களில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்றக்கோரிய வழக்கில், அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள சாய்பாபா கோவில்களில், வெள்ளை மார்பிள் கல்லால் ஆன சாய்பாபா சிலை உள்ளது. சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. சாய்பாபாவின் உண்மையான பெயர் தெரியவில்லை. அவரது மத அடையாளத்தையும் உறுதி செய்ய முடியவில்லை. சீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் உள்ள ஹிந்து கோவில்களில், சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சாய்பாபா கோவில்களில், நந்தி சிலை உடன் சாய்பாபா சிலையும் நிறுவப்பட்டுஉள்ளது. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது. சாய்பாபா சிலைக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி சிலையை அகற்ற வேண்டும்.சாய்பாபாவை பின்பற்றுபவர்கள் உள்ளனர். அதற்காக, ஹிந்து ஆகம விதி, நம்பிக்கையை மீற முடியாது. எனவே, ஹிந்து கோவில்களில் எங்கெங்கு சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளதோ, அவற்றை அகற்ற வேண்டும். எதிர்காலத்திலும், சாய்பாபா சிலையை கோவிலுக்குள் நிறுவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Ramarao Ramanaidu
ஜூன் 29, 2024 17:07

இதனை நான் வரவேற்கிறேன் ... முழு மனதுடன் ஆமொதிக்கிறேன்


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 28, 2024 11:29

ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் ஆகமத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பாபாவுக்கு தனி கோவில்கள் உள்ளன. ஆகம விதிப்படி இல்லாத கோவில்களில் பாபாவுக்கு சிலைகள் அமைப்பதில் தவறு இல்லை


Ramaswamy Jayaraman
ஜூன் 27, 2024 14:15

கோவில்களில் சிலை நிர்மாணம் என்பது, தனி ஒரு மனிதனால் செய்யப்படும் காரியமல்ல. அரசாங்கம் கோவில்களை நிர்மாணிப்பதில்லை. இதில் அரசாங்கத்தையே, அல்லது ஒரு கோவிலின் நிர்வாகத்தையோ, யாரும் குறை கூற முடியாது. தனிமனிதனுக்கு, ஒரு கோவிலின் வழிபாடு முறை பிடிக்கவில்லை என்றால், அவர் அந்த கோவிலை தவிர்க்கலாம். இதற்காக நீதிமன்றத்தை நாடுவதோ அல்லது அரசாங்கத்தை குறை சொல்வதை தவிர்க்கலாம்.


Dharmavaan
ஜூன் 27, 2024 15:26

ஹிந்து கோயில் ஆகம விதிப்படி அதன் புராணம் இதிகாச தெய்வங்கள்படி இருக்க வேண்டும் . நீதி மன்றத்தின் நாடுவது சரியே


Raja
ஜூன் 29, 2024 12:40

கோவில் என்பது பலர் கூடுமிடம், அதெற்கென சட்ட திட்டங்களை ஆகம விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் தவறு இதுநாள் வரை ஏற்படவில்லை, இப்போது ஆளுவது இந்து மத நம்பிக்கையற்ற அரசு, சனாதனத்தை அழிப்போம் என சூளுரையேற்ற அமைச்சர் மற்றும் முதல்வரின் மகன், இந்த ஆட்சியில் கோவில்களில் நியாயம் வேண்டும் என நீதி மன்ற படியேறுவது அவரது உரிமை,


MADHAVAN
ஜூன் 27, 2024 10:57

நல்லா பாருங்க மக்களே, இவனுங்கதான் பாபா சிலையை கொண்டுவந்து வச்சு கல்லா கட்டுறானுங்க, இப்போ இப்படி பண்ணுறானுங்க, இப்பவும் சொல்றோம் நாங்கள் கடவுள் இல்லை னு சொல்லலை கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த மதவாதிகளை தான் வெறுக்கிறோம்,


Dharmavaan
ஜூன் 27, 2024 15:27

நீகல்லாவுக்கு போடாதபோது உனக்கு ஏன் கவலை


kumar
ஜூன் 28, 2024 21:07

கடவுள் பேரை வைத்து பெண்களை சீரழிக்கும் மதத்தையும் , ஞாயிறு ஞாயிறு கல்லா காட்டும் மதத்தையோ , ஊமைகளை பேச வைப்போம் , முடவர்களை நடக்க வைப்போம் என்று கூட்டங்களில் கல்லா காட்டும் மத போதகர்களும், அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் மார்கத்தையோ கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா உனக்கு ?


chails ahamad
ஜூன் 27, 2024 10:37

பொதுவாக இதுபோன்ற வழக்குகள் தேவையற்ற ஒன்றென்பேன், மக்களது வாழ்க்கை தரம் உயர, ஏழைகளின் வறுமை நிலை மாற, மது பானங்களை தடை செய்திட, போன்றவைகளில் பொதுநலன் விரும்புபவர்கள் அக்கறை கொள்வதே நல்லது, சிலை வணக்க வழிபாடுகளை விரும்புபவர்கள் அவரவர் வழிமுறைகள்படி வழிபடட்டும் என ஒதுங்குவதே நன்று .


Raja
ஜூன் 29, 2024 12:45

சிலை இல்லாதவர்களுக்கு எந்த வழிபாட்டு முறையும் தேவை இல்லையே எதற்காக பல பிரிவுகள் உள்ளன?


ramani
ஜூன் 27, 2024 07:56

ஹிந்து ஆகம விதிகளை மீற கூடாது.


Asha
ஜூன் 26, 2024 22:42

முஸ்லிம் உங்களை அவரை கும்பிட சொன்னாங்களா ? சாய் பாபா உங்களை கும்பிட சொன்னாங்களை ? நீங்க அவரை வைத்து பொழப்பு நடத்தி கிண்டு ஏன் முஸ்லீம் பள்ளி வாசல்ல வைக்க சொல்லுறீங்க? லூசா நீங்க?


Sampath
ஜூன் 26, 2024 18:47

நல்ல முயற்சி, வழக்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் எந்தெந்த கடவுளர்கள் தேவதைகள் தேவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். ஆன்மீகப் பெரியவர்கள் அவ்வப்போது இது சம்பந்தமாக குரல் கொடுத்தாலும் இவர்கள் மீதுள்ள மூடநம்பிக்கை மக்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் கருத்து வேறுபடாமல் போய்விடுகிறது


Lsk
ஜூன் 26, 2024 17:24

அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய பொருட்கள் என்று பல சான்றுகள் உள்ளது


G.Subramanian
ஜூன் 26, 2024 16:45

தேவையற்ற கலகத்தை தவிர்க்க உதவும் . ஒருவர் சீரடி சாய்பாபா , மற்றொருவர் , புட்டபருத்தி சாய்பாபா, சிலர் , காஞ்சி பெரியவர் என்று ஆரம்பித்தால் , ஈசனையும் , பெருமாளையும் , அம்பாளையும் ,துருகனையும் ,விநாயகரையும் நிம்மதியாக வணங்குவது எங்கே?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை