உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடற்கல்வி ஆசிரியர் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ளது: அண்ணாமலை

உடற்கல்வி ஆசிரியர் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ளது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழக அரசு, 250 - 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தையே தொடர வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், 250 - 400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 நபருக்கு ஒரு ஆசிரியர் என்பதாக மாற்றி, இம்மாதம், 2ல் அரசாணை பிறப்பித்திருக்கிறது தி.மு.க., அரசு.பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனம் செய்வதைக் குறைக்கும் நோக்கில், இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான தி.மு.க., அரசின் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் உடற்கல்வியையும், விளையாட்டு திறனையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்திற்காக கல்வி கொள்கை குழு என்ற பெயரில், தி.மு.க., அரசு அமைத்த குழு அறிக்கையை, முதல்வரோ, அமைச்சர்களோ ஒருவர்கூட படித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. வெறும் விளம்பரத்துக்காக ஒரு குழுவிற்கு இரு ஆண்டுகள் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு இருக்கிறது. புதிய அரசாணை வாயிலாக, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோயிருக்கிறது.மேலும், பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்து மாணவர்களை ஓரளவிற்கு காப்பாற்றி வருவது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தான்.கஞ்சா விற்பனைக்கு தடையாக இருக்கும் அவர்களை தடுப்பதற்காகவே, இதுபோன்ற வினோதமான அரசாணையை, தி.மு.க., அரசு பிறப்பித்து இருப்பதாக எண்ண வேண்டியுள்ளது. உடனே, அரசாணையை ரத்து செய்வதுடன், முந்தைய நிலையே தொடர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sudhakar k
ஜூலை 12, 2024 11:03

நல்ல கருத்துகள் 200 மாணவர்களுக்கு ஒரு பிஸிக்கல் எடுகேஷன் டீச்சர் வேண்டும் 23 வருடம் ஆகிறது நோ போஸ்டிங் மனா உளைச்சல் சாவதே நல்லது


INDIAN
ஜூலை 06, 2024 21:13

ஏற்கனவே மோடி ஆட்சியில் 10 வருடங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கிறார்கள். இது வேறயா?


K.Muthuraj
ஜூலை 06, 2024 18:37

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளை பொறுத்தளவில் உடற்பயிற்சி ஆசிரியர் பணி என்பது ஆட்டுக்கு தாடி போல். வெட்டி சம்பளம். பெரும்பாலான பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நிற்பதற்கு மட்டுமே இடம் இருக்கும். இதுலே எங்கே ஓடி விளையாட. கழிவறைக்கே இடம் இருக்காது. இதிலே விளையாட்டு எங்கு வைத்து விளையாட.


kumarkv
ஜூலை 06, 2024 09:37

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கஞ்சா, கள்ள சாராயம், ஹுண்டி சினிமா


raja
ஜூலை 06, 2024 06:04

அப்புறம் திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட கோவால் புரா மாபியா குடும்பத்துக்கு வியாபாரத்துக்கு எந்தவித இடையூறும் வந்திட கூடாதுல்ல ....அதான்..


sankaranarayanan
ஜூலை 06, 2024 05:52

உதயன்னாவில் விளையாட்டுத்துறையின் விளையாட்டா இது?


Thirumalaimuthu L
ஜூலை 06, 2024 05:35

மிகவும் சிறப்பான கருத்து. அருமை


அரசு
ஜூலை 06, 2024 05:05

அறிக்கை மன்னன் அண்ணாமலை வாழ்க.


kumarkv
ஜூலை 06, 2024 09:38

கள்ள சாராயம் மன்னன் யாறு


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 04:36

பள்ளிகளுக்கு ஜூனியர் 90 என்ற பிராண்ட்டில் க. சா. சம்ளை செய்ய ஏற்பாடு செய்வதில் பிஸி...


மேலும் செய்திகள்