உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டும் பிரசாந்த் கிஷோர்: துரை வைகோ காட்டம்

ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டும் பிரசாந்த் கிஷோர்: துரை வைகோ காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது' என்று ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=21p621h2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியதாவது: மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும், நிதி அமைச்சரையும் சந்தித்து கேட்டுக் கொண்டேன். அதன்படி நீக்கம் செய்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் என்பது மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.பிளாஸ்டிக் லைட்டரால் அந்த மக்களுக்கு பாதிப்பு வந்தது. மத்திய அரசிடம் முறையிட்டு பிளாஸ்டிக் லைட்டரை இறக்குமதி செய்வதற்கான தடையை கொண்டு வர பேசினேன். இதனை விற்பனை செய்வதற்கான தடையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். கண்டிப்பாக அதற்கான முயற்சி எடுப்பேன்.பிரசாந்த் கிஷோர் பொலிடிக்கல் அனலிஸ்ட். அவர் சொல்வதெல்லாம் 100க்கு 100 நடப்பது கிடையாது. பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது. விஜயை பொறுத்தவரை மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவருடைய கொள்கைகளை சிந்தாந்தங்களை சொல்லி இருக்கிறார். அதை வரவேற்கிறோம். இந்த அரசை எதிர்க்கிற எதிர்க்கட்சியாக அவருடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Tetra
மார் 10, 2025 14:46

உண்மை


Ramalingam Shanmugam
மார் 10, 2025 10:41

நம்ம வைகோ 2 போய் ITC வேலைய பார்


Keshavan.J
மார் 10, 2025 10:36

அப்போ விஜய் தான் வெற்றி பெறுவார் என்கிறிர்ரா. கிஷோர் கணக்கு இந்த முறை தப்பாக போகும்.


Naga Subramanian
மார் 10, 2025 10:34

மதிமுக பட்டத்து இளவரசருக்கு ஏன் கோபம் வருகிறது? தோற்பதில் தான் வெல்வது உறுதி என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்புறம் என்ன, தனது தந்தையை ஒரே ஒரு முறை விஜய் வீட்டிற்க்கு விஜயம் செய்யச் சொல்லவும். பிறகு நிச்சயமாக விஜய் தோற்பது உறுதி.


SIVA
மார் 10, 2025 08:22

அப்பாவை போல் பிள்ளை, பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர் என்றால் அவர் இப்போது நடிகர் ஜோசப் விஜய் மீது பந்தயம் கட்டி உள்ளார், அப்ப நடிகர் ஜோசப் விஜய் ஜெயிக்கும் குதிரை என்று துரை வைகோ சொல்கின்றார்.. திமுக ஜாக்கிரதை.... இன்னிக்கு நான் வந்த வேலை செய்து விட்டேன் நன்றி நன்றி நன்றி ....


Bhaskaran
மார் 10, 2025 06:27

நீயும் உன் அப்பனும் சொந்த கடை நடத்தி அரசியல் வியாபாரம் செய்யும் மானமில்லாதவர்கள் திமுகவை கேவலமாக விமரிசித்துவிட்டு அவங்க காலை நக்கி பிழைப்பவர்கள்


Bhakt
மார் 09, 2025 23:46

மானங்கெட்ட குடும்ப கட்சி


mohanraj
மார் 09, 2025 20:42

உங்கள் அப்பாவும் அதே வேலையைத்தான் செய்தார். ஜெயலலிதா அம்மையார் இருந்த பொழுது மதுக்கடையை மூட வேண்டும் என்று நடையோ நடை என்று நடந்தார் ஆனால் இப்பொழுது கூட்டணியில் இருக்கும் அரசை வலியுறுத்தி மூட சொல்லலாமே எதற்கு இந்த நாடகம் துரை அவர்களே


oviya vijay,
மார் 09, 2025 19:55

இவனுங்க ஆரியன் வடக்கன் அப்டின்னு கூவும் ஆனா அவங்க தயவு இல்லமா இங்கே ஒரு அணுவும் அசையாது. 21 ஆம் பக்கம் ஈர வெங்காய இப்போ இருந்தாலும் அவங்க தயவு தேவை


MUTHU
மார் 09, 2025 19:41

ஆனால் இவரும் இவர் அய்யாவும் நொண்டி குதிரைகள்